Benefits of Epsom Salt : இந்த உப்பை பயன்படுத்தி குளிப்பதால் இத்தனை நன்மைகளா? மேலும் என்ன செய்கிறது பாருங்கள்!
Benefits of Epsom Salt : இதை சிறிதளவு தண்ணீரில் கலந்து பருகலாம். இதன் கசப்பு சுவையால் இதை சமையலுக்கு பயன்படுத்த முடியாது. இது மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளை போக்க உதவுகிறது. இப்போதும் பெரும்பாலானோருக்கு போதிய மெக்னீசிய சத்து கிடைப்பதில்லை.
எப்சம் உப்பு, சரும பராமரிப்பு, அழகுக்கு பயன்கொடுப்பதுடன் பல்வேறு பலன்களைக் கொடுக்கிறது. மனஅழுத்தம் சதை வலி போன்ற உடல் உபாதைகளுக்கும் நன்மை கொடுக்கிறது. இதை வாங்குவதும் எளிது, சரியான பயன்படுத்தினால் உடலுக்கு அபாயமற்றது.
எப்சம் சால்ட், எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட், இது மெக்னீசியம், சல்பஃர், ஆக்ஸிஜன் கலந்தது. இது வழக்கமான உப்பு போலவே தோற்றமளிக்கும். இதை கலந்து குளிக்க பயன்படுத்தாலம். இதனால் இது குளியல் உப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உப்பை போல் இருந்தாலும் கரிக்காது கசக்கும் தன்மை கொண்டது.
இதை சிறிதளவு தண்ணீரில் கலந்து பருகலாம். இதன் கசப்பு சுவையால் இதை சமையலுக்கு பயன்படுத்த முடியாது. இது மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளை போக்க உதவுகிறது. இப்போதும் பெரும்பாலானோருக்கு போதிய மெக்னீசிய சத்து கிடைப்பதில்லை.
எப்சம் உப்பை தண்ணீரில் கரைக்கும்போது, இது மெக்னீசியம் மற்றும் சல்ஃபேட்டை வெளியிடுகிறது. இவற்றை உங்கள் சருமம் உறிஞ்சிக்கொண்டு, உங்கள் உடலுக்கு தேவையான மெக்னீசியம் மற்றும் சல்ஃபேட்டை கொடுக்கிறது.
பொதுவாக எப்சம் உப்பு தண்ணீரில் கரைத்து குளிக்க பயன்படுத்தப்படுகிறது.
உடலுக்கு மெக்னீசியச்சத்தை வழங்குகிறது
நமது உடலுக்கு மெக்னீசியம் 4வது அதிக தேவையான மினரல் ஆகும். முதலாவது கால்சியம் ஆகும். இதில் உள்ள 300க்கும் மேற்பட்ட உயிர் வேதிமாற்றங்கள் உங்கள் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு உதவுகிறது. எப்சம் உப்பு குளியலின் மூலம் கிடைக்கும் மெக்னீசியச்சத்து, வாயில் உட்கொள்வதைவிட அதிகம். வாய் வழியாக உட்கொள்ளும்போது இந்த சத்தை உடல் அதிகளவில் உறிஞ்சாது.
ஆழ்ந்த உறக்கத்தை அதிகரித்து மனஅழுத்தத்தை குறைக்கிறது
போதிய அளவு மெக்னீசியம் உறக்கம் மற்றும் மனஅழுத்தத்தை கடக்க தேவைப்படுகிறது. மெக்னீசியம், உங்கள் மூளை நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை உற்பத்தி செய்ய உதவி, அது உங்களின் உறக்கத்தை ஏற்படுத்தி, மனஅழுத்தத்தை குறைக்கிறது.
உங்கள் உடலில் மெக்னீசிய சத்து குறையும்போது, அது உறக்கத்தின் தரத்தை குறைத்து, மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மலச்சிக்கலுக்கு உதவுகிறது
இந்த உப்பை நீங்கள் சிறிதளவு தண்ணீரில் கலந்து வாய்வழியாக பருகும்போது, அது மலமிலக்கியாகப் பயன்படுகிறது. இது உங்கள் குடலில் தண்ணீரை அதிகரித்து, குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது. எப்சம் உப்பை வாய்வழியாக எடுக்கும்போது அது வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே இதை எப்போதாவதுதான் வாய் வழியாக உட்கொள்ள வேண்டும்.
வலி நிவாரணி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
எப்சம் உப்பு கலந்த நீரில் குளிக்கும்போது அது உடல் வலியை போக்குகிறது. உடற்பயிற்சிக்கு அதிகளவில் மெக்னீசியம் தேவைப்படுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க உதவுகிறது. தசைகள் மற்றும் மூளையில் லாக்டிக் அமிலம் சேர்வதை குறைக்கிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.
பாதுகாப்பு மற்றும் பக்கவிளைவுகள்
எப்சம் உப்பு, பாதுகாப்பானதுதான், ஆனால் இதை வாய் வழியாக எடுத்துக்கொள்ளும்போது இது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இது மலமிலக்கியாக செயல்பட்டாலும் சில நேரத்தில் வயிறு உபாதைகள் மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதை உட்கொள்ளும்போது அதிகளவில் தண்ணீர் கட்டாயம் பருகவேண்டும்.
இதனால் செரிமான பிரச்னைகள் நீங்கும். கொடுக்கப்பட்ட அளவைவிட அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு அந்த பாக்கெட்களிலே கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
அதிகளவில் மெக்னீசியம் உட்கொள்வது இதய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. மனநிலையை மாற்றி மரணத்தை கூட ஏற்படுத்தும். இது நீங்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது நேர்கிறது. எனவே இதை பயன்படுத்தும்போது கவனம் தேவை.
குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத தூரத்தில் வைக்கவேண்டும். பெரும்பாலும் வெளிப்புற உபயோகத்துக்கும், குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்