தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Eating Scarlet Gourd

Scarlet gourd: சர்க்கரை நோயாளிகள் கோவக்காய் சாப்பிடலாமா? .. என்ன சொல்கிறார் மருத்துவர்?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 16, 2024 09:00 AM IST

இது நம் நரம்பு மண்டல த்திற்கும் நல்லது. ஆகையால் நரம்பு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் கோவக்காயை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

கோவாக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
கோவாக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

100 கிராம் கோவக்காயில் 1.2 கிராம் புரதம் இருக்கிறது. 0.1 சதவீதம் கொழுப்பு இருக்கிறது. 1.6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. 3.1 கிராம் மாவு பொருள் இருக்கிறது. 

40 மில்லி கிராம் கால்சியமும், 30 மில்லி கிராம் பாஸ்பரஸும், 1.4 மில்லி கிராம் இரும்பு சத்தும், 0.07 மில்லிகிராம் தையமின் என்ற வைட்டமினும், 0.08 மில்லி கிராம் ரிபோப்ளாவின் என்ற வைட்டமினும், 59 மில்லி கிராம் போலிக் ஆசிடும், 1.56 மில்லி கிராம் கரோடீனும், 18 கிலோ கிராம் கலோரியும் இருக்கிறது.

வாய்ப் புண்கள், வயிற்று புண்கள் உள்ளவர்கள் இந்த கோவக்காயை சாப்பிடுகிறார்கள். அதற்கு காரணம், அதில் உள்ள வைட்டமின் பி சத்து இந்த புண்களை ஆற்றுவதற்கு பயன்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு தேவைப்படும் இன்சுலினை கோவக்காய் சுரக்கிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை இந்தக் காய் தடுக்கிறது. 

இது நம் நரம்பு மண்டல த்திற்கும் நல்லது. ஆகையால் நரம்பு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் கோவக்காயை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து ஜீரணத்துக்கு நல்லது. ஆகையால் வாரத்தில் இருமுறை கோவக்காயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

நன்றி: மருத்துவர் கார்த்திகேயன்!

 

கருஞ்சீரகத்தின் நன்மைகள் என்ன என்பதை கூடுதலாக இந்தக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்!

கருப்பு விதைகள் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிறது. இது இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதை உட்கொள்வதால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். உண்மையில் வழக்கமான சீரகம் அளவுக்கு நமது வீட்டு சமையலறையில் நாம் இதை பயன்படுத்துவதில்லை. இதை நீங்கள் பல்வேறு வழிகளில் உபயோகிக்கலாம். அது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது.

சருமம் மற்றும் தலைமுடிக்கு உதவுகிறது

இதில் வைட்டமின் ஏ, பி, பி 12, சி மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் உள்ளன. அவை தலைமுடி ஆரோக்கியம் மற்றும் சரும நன்மைக்கு உதவுகின்றன. சரும பிரச்னைகளுக்கு உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே இவற்றை உங்களின் அழகு சாதான பொருட்களுடன் சேர்த்து உபயோகிப்பது நீங்கள் ஆரோக்கியமான சருமம் மற்றம் தலைமுடியை பெறுவதற்கு உதவுகிறது.

மனநிலையை மேம்படுத்துகிறது

கருப்பு விதைகளில் உள்ள உட்பொருட்கள், மனநிலையில் நல்ல மாற்றங்களை கொடுக்கிறது. கவலை மற்றும் டென்சன் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் மனஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடையை பராமரிக்க உதவுகிறது

உடல் எடையை பராமரிப்பதில் கருஞ்சீரகம் உதவுகிறது. இந்த விதைகள், உடலில் ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்தது. இவை உடல் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது மற்றும் பசியையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் அலர்ஜி அல்லது அல்சர் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைகளைப்பெற்று உபயோகிக்க வேண்டும்.

சுவாச பிரச்னைகளை குறைக்கிறது

கருஞ்சீரகம், அலர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணத்தை வழங்குகிறது. அதில் உள்ள அழற்சி மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் சுவாச மண்டலத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

மனஅழுத்ததை போக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், செல்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாப்பு கவசம் அளிக்கிறது. அந்த தன்மை கருஞ்சீரகத்தில் அதிகம் உள்ளது. இவற்றை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்கள் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. ஆரோக்கியம் மேம்படுகிறது. உங்கள் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. பல்வேறு பிரச்னைகளையும் இந்த ஒரு பொருளே குணப்படுத்துகிறது.

அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் நிறைந்தது

கருஞ்சீரகத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளது. இது பல்வேறு நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது வளர்சிதை மாற்றக் குறைபாடு, ஆட்டோஇம்யூன் நோய்கள், அழற்சி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. அடிக்கடி எடுத்துக்கொள்தால் அழற்சியை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

கருஞ்சீரகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உட்பொருட்கள் உள்ளது. இந்த விதைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இதனால் உடல் தொற்று மற்றும் நோய்களில் இருந்து விடுபட உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கருஞ்சீரகம், செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வயிறு உப்புசத்த்தில் இருந்து விடுபட உதவுகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பொதுவான உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை முறையாக பராமரிக்கிறது

ரத்தத்தில் சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. இதை சரிவிகித உணவுடன் சேர்த்துக்கொண்டால், அது உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

இதயத்துக்கு நன்மை அளிக்கும் ஒன்றாக கருஞ்சீரகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவு, உடலில் கொழுப்பு அளவு ஆகியவற்றை முறையாக பராமரிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்