தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Eating Goat Brain

Healthy Food Recipe: ஆண்மையை அதிகரிக்க உதவுமாம் ஆட்டு மூளை!

I Jayachandran HT Tamil
Mar 29, 2023 09:32 PM IST

ஆட்டு மூளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ஆண்மையை அதிகரிக்க உதவுமாம் ஆட்டு மூளை
ஆண்மையை அதிகரிக்க உதவுமாம் ஆட்டு மூளை

ட்ரெண்டிங் செய்திகள்

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான பலனை தருவதாக உள்ளது. ஒரு சிலர் ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள்.

இதன் சுவையே அலாதியானது. இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.

ஆட்டு மூளையில் கெட்டக் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நினைவாற்றலை அதிகரிக்கும்.இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.

ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் விருப்பமாக இருக்கும். தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள்.

இந்த தலைக்கறியை சாப்பிட்டால் இதய நோய் தீரும் என்கின்றனர் மருத்துவர்கள். குடலுக்கு பலம் கிடைக்கும்.

ஆட்டு மூளையை பல்வேறு மசாலாப் பொருட்கள் சேர்த்து வறுத்து சாப்பிடுகின்றனர். ஏற்கெனவே ஆட்டு மூளை குளிர்ச்சித் தரக்கூடிய ஆற்றல் உள்ள நிலையில் அதை மிளகு சேர்த்து சமைப்பதால் மேலும் குளிர்ச்சியை உண்டாகுக்கும், கோடைக்காலங்களில் ஆட்டு மூளையை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்