தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Eating Fish

Health Tips: குன்றாத நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு மீன் சாப்பிடுங்கள்!

I Jayachandran HT Tamil
Mar 25, 2023 11:24 PM IST

உடல் ஆரோக்கியம் குறையாமல் இருப்பதற்கு மீன் சாப்பிட வேண்டிய அவசியம் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்

 குன்றாத நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு மீன்
குன்றாத நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு மீன்

ட்ரெண்டிங் செய்திகள்

கடல் உணவான மீன் உணவுகளின் ஆரோக்கியம் அற்புதமானது என்பதை உணர்ந்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

ஆடு, கோழி இறைச்சியை விட மீன் உணவுகள் தீங்கில்லாதது என்பதோடு இதில் உடலுக்குத் தேவையான சத்துகளும், கொழுப்பு அமிலங்களும் நிறைந்திருக்கின்றன.

அதனால் தான் அசைவ உணவுகளில் ஒன்றான மீன்களில் இருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. அதிகம் தீங்கு விளைவிக்காத மீன் உணவு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தைப் பாதுகாக்கிறது. மன அழுத்தம் வராமல் காக்கிறது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு என்றும் இதைச் சொல்லலாம்.

மீன் இயற்கையாகவே புற்று நோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. முக்கியமாக குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.

மீன் உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதை 12 % வரை குறைக்கும் வாய்ப்புள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

மீன்களில் அதிகளவு புரோட்டீன் மற்றும் விட்டமின் டி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

மீன் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் ஒமெகா 3 என்னும் கொழுப்பு👋 அமிலத்தை இயற்கையாக தருகிறது மத்திமீன்.

இதை குழம்பாக செய்யாமல் வாணலியில் வறுக்கும் போது இதிலிருந்து ஒமெகா எண்ணெய் வடிவதைப் பார்க்கலாம்.

மீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்குவதும் குறைகிறது.

குழந்தைகளுக்கு மீன் கொடுப்பது மிகவும் நல்லது. சின்ன வயதிலிருந்தே வேக வைத்த மீன்களைச் சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது.

கூடவே, இது அவர்களுடைய நினைவாற்றல், அறிவுத் திறனை அதிகரிக்கச் செய்யும். மீன் குறைந்த கொழுப்புடைய உணவு .

அதிக அளவு புரோட்டீன் சத்து இதில் உண்டு. இதிலுள்ள ஒமேகா அமிலச் சத்து பெண்களுக்கு ரொம்பவே நல்லது. வாரம் இரண்டு மூன்று முறையாவது வீட்டில் மீன் சமைத்துச் சாப்பிடுங்கள்.

அல்சீமர் போன்ற வயதானவர்களுக்கு வரக்கூடிய நினைவை வலுவிழக்கச் செய்யும் நோய்களை, மீன் உணவை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் தவிர்க்கலாம்.

மீன் உணவை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தமும் குறைவாகவே இருக்கும். காரணம், மீனிலுள்ள ஒமேகா அமிலம் மூளையில் செய்யும் மாயாஜாலம் தான்.

மீன் தொடர்ந்து சாப்பிடுபவர் களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது. காரணம் இதிலுள்ள ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ எனும் பொருள்.

WhatsApp channel

டாபிக்ஸ்