தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Drumstick Seeds Removes Impotence And Gives Horse Strength To The Body So Many Benefits In This Seed

Benefits of Drumstick Seeds : ஆண்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கு குதிரை பலத்தை தரும்! இந்த விதை சேர்த்த பானத்தின் நன்மைகள்

Priyadarshini R HT Tamil
Mar 11, 2024 11:30 AM IST

Benefits of Drumstick Seeds : குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கால இடுப்பு வலி, கை-கால் வலி உடல் சோர்வு போன்ற பிரச்னைகளையும், வெள்ளை போக்கையும் குணப்படுத்துகிறது. மூட்டுவலி மற்றும் கை-கால் வலி இருப்பவர்கள் இதை ஒரு வாரம் சாப்பிட்டாலே அவை காணாமல் போகும்.

Benefits of Drumstick Seeds : ஆண்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கு குதிரை பலத்தை தரும்! இந்த விதையில் இத்தனை பலன்களா?
Benefits of Drumstick Seeds : ஆண்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கு குதிரை பலத்தை தரும்! இந்த விதையில் இத்தனை பலன்களா?

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய வாழ்க்கைமுறையில் உணவு சரியாக எடுத்துக்கொள்ள தவறுவதால் நிறைய நோய்களுக்கு ஆளாகிறோம். அதில் இரும்புச்சத்து குறைபாடு, எலும்பு தேய்மானம், சோர்வு, கண் நரம்பு பாதிப்பு, மன அழுத்தம், மூட்டுவலி, மாதவிடாயில் அதிகப்படியான உதிரப்போக்கு, வலி, பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்போக்கு என அனைத்தையும் சரிசெய்யும்.

தேவையான பொருட்கள்

முருங்கை விதை – 50 கிராம்

(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். முருங்கைகாயில் இருந்து கிடைக்கக்கூடிய விதை. முருங்கை மரம் இருந்தால், மரத்திலே முத்தி காயவிட்டு, பின்னர் அந்த விதைகளை சேகரித்துக்கொள்ளலாம். உடலுக்கு குதிரை பலத்தை கொடுக்கும். உடல் அசதியை நீக்கும், கண் சோர்வை நீக்கும், கண் பார்வைக்கு நல்லது. கண் நரம்புகளை வலுப்படுத்தும், எலும்பு தேய்மானம், மூட்டு வலி, இடுப்பு வலி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும்)

பரங்கி விதை – 50 கிராம்

நெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை

கடாயை சூடாக்கி முருங்கை விதையை வறுக்க வேண்டும். அடுத்து நெய்யை ஊற்றி, பரங்கி விதையை பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

இரண்டையும் ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல பொடியாக இல்லாவிட்டால், ஒரு சல்லடையில் சலித்து பொடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். எஞ்சியதையை சேர்க்கக்கூடாது.

இதை வழக்கமான அறை சூட்டிலே வைத்துக்கொள்ளலாம். ஃபிரிட்ஜிலும் வைத்துக்கொள்ளலாம்.

(இரும்பு அல்லது எவர்சில்வர் கடாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நான்ஸ்டிக் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது)

பயன்படுத்தும் முறை

மிதமான சூட்டில் உள்ள பாலில், ஒரு ஸ்பூன் இந்தப்பொடியை சேர்த்து, அப்படியே பருகவேண்டும். இதில் இனிப்புக்காக தனியாக எதுவும் சேர்க்க வேண்டாம். ஆனால் பருக முடியாவிட்டால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சிறிதளவு கலந்துகொள்ளலாம். வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவேண்டும்.

இதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் டீ, காஃபிக்கு பதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு குதிரை பலம் கிடைக்கும். உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். கண் நரம்பு பாதிப்புக்கள் குணமாகும். மனஅழுத்தம் குறையும். ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கும். ஆண்கள், பெண்கள் என அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கால இடுப்பு வலி, கை-கால் வலி உடல் சோர்வு போன்ற பிரச்னைகளையும், வெள்ளை போக்கையும் குணப்படுத்துகிறது. மூட்டுவலி மற்றும் கை-கால் வலி இருப்பவர்கள் இதை ஒரு வாரம் சாப்பிட்டாலே அவை காணாமல் போகும்.

பாலில் மட்டுமே கலந்து பருகவேண்டும். ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும். ஆண்கள், பெண்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடும்போது குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவு போதுமானது. வயிறை சுத்தம் செய்யும். எனவே கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்