தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Drinking Vetiver Water

Vettiver Water: வெட்டிவேர் கலந்த நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இதோ விவரம்!

Kathiravan V HT Tamil
Jan 28, 2024 11:14 AM IST

”Vettiver Water: வெட்டிவேர் ஊறிய நீரை குடித்தால் தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் மண்பானை நீரில் வெட்டிவேரை இட்டு குடிப்பது வழக்கம். இது தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும்”

வெட்டிவேர் கலந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
வெட்டிவேர் கலந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

வெட்டிவேர் ஊறிய நீரை குடித்தால் தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் மண்பானை நீரில் வெட்டிவேரை இட்டு குடிப்பது வழக்கம். இது தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும்.

வெட்டிவேர் ஊறிய நீரை தயாரிக்க, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு கைப்பிடி வெட்டிவேரை சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில்

வெட்டிவேரை நீக்கி, அந்த நீரை குடிக்கலாம். வெட்டிவேர் ஊறிய நீரை தினமும் குடிப்பது நல்லது. குறிப்பாக, வெயில் காலத்தில் வெட்டிவேர் ஊறிய நீரை குடிப்பது மிகவும் நல்லது.

  • வெட்டிவேர் கலந்த தண்னீரால் ஏற்படும் நன்மைகள்:-
  • வெட்டிவேர் ஊறிய தண்ணீரை குடித்தால் தாகம், தணித்து, உடலை குளிர்ச்சியடையச் செய்யும்.
  • உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, உடலுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. 
  • வெட்டிவேர் ஊறிய நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
  • காய்ச்சல் மற்றும் உடல் சூடு பிரச்னையால் அவதிப்படுவோர் வெட்டிவேர் கலந்த தண்ணீரை குடித்துவர பாதிப்புகள் குறையும். 
  • நீர் எரிச்சல் பாதிப்பு உள்ளவர்கள் வெட்டிவேர் ஊறிய நீர் குடித்தால் சிறுநீர் கழிப்பது எளிதாக இருக்கும்.
  • தோல் நோய் பாதிப்பு கொண்டார்கள் வெட்டிவேர் ஊறிய நீர் குடித்தால் தோல் நோய்கள் குணமாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்