Coffee Without Sugar: சுகர் இல்லாத காபி குடித்தால் போதும்! இத்தனை நன்மைகளா? புதிய ஆய்வில் தகவல்!
Coffee Without Sugar: காபி, டீ குடிப்பதும் சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது வெளிவந்த ஆய்வு முடிவு ஒன்றில் காபி குடிப்பது மறதி நோய் எனும் அல்சைமர் வராமல் தடுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

நமது வீடுகளில் டீ, காபி குடிப்பது தினசரி வழக்கமான ஒன்றாகும். சிலருக்கு காபி, டீ குடிக்கமால் இருந்தால் அந்த நாளே தொடங்காது. ஆனால் காபி, டீ குடிப்பதும் சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது வெளிவந்த ஆய்வு முடிவு ஒன்றில் காபி குடிப்பது மறதி நோய் எனும் அல்சைமர் வராமல் தடுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக டீயை விட காபி கசப்பானது . சர்க்கரை சேர்க்காமல் காபி குடிப்பதைப் பலர் விரும்ப மாட்டார்கள். இதனால் சர்க்கரை இல்லாத காபியை யாரும் குடிப்பதில்லை. ஆனால் இனிப்பு இல்லாத காபி குடிப்பதால் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
நாம் உண்ணும் உணவுக்கும் அல்சைமர் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களுக்கும் இடையே மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அல்சைமர் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் இல்லாத உணவுகளை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். தினமும் காபி குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் காபியில் உள்ள சர்க்கரையை குறைப்பது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சர்க்கரை பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காபியில் சர்க்கரை சேர்ப்பதால் ருசி நன்றாக இருக்கும் ஆனால் ஆரோக்கிய நன்மைகள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 2,00,000 க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அல்சைமர் நோயின் தாக்கம்
இனிப்பு சேர்க்காத காபி குடிப்பவர்கள், சர்க்கரை கலந்த காபி குடிப்பவர்கள், செயற்கை இனிப்பு கலந்த காபி குடிப்பவர்கள், காபி குடிக்காதவர்கள் என நான்கு வகையாக ஆய்வு நடத்தப்பட்டது. காபி குடிக்காதவர்களைக் காட்டிலும் இனிப்பு இல்லாத காபியை அருந்துபவர்களுக்கு அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் வருவதற்கான வாய்ப்பு 29 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இதுபோன்ற நோய்களால் இறப்பதற்கான ஆபத்து 43 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூரோடிஜெனரேட்டிவ் நோய்கள் என்பது முற்போக்கான நோய்களாகும், அவை நினைவகம், விமர்சன சிந்தனை மற்றும் அன்றாட பணிகளை பாதித்து இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும். டிகாஃப் காபி (இதில் காஃபின் இல்லை) நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இத்தகைய காபி அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களின் அபாயத்தை 34 சதவிகிதம் முதல் 37 சதவிகிதம் மற்றும் இறப்பு அபாயத்தை 47 சதவிகிதம் குறைக்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்