Benefits of Dates : கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலுக்கு தேவையான நன்மைகளை தரும் முக்கிய பழம்! தினம் உணவில் கட்டாயம்!
Benefits of Dates : கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலுக்கு தேவையான நன்மைகளை தரும் முக்கிய பழம்! தினம் உணவில் கட்டாயம்!

ஒரு கப் பேரிட்சை பழத்தில் 277 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட் 75 கிராம், நார்ச்சத்துக்கள் 7 கிராம், புரதம் 2 கிராம், பொட்டாசியம் 15 சதவீதம், மெக்னீசியம் 13 சதவீதம், காப்பர் 40 சதவீதம், மாங்கனீஸ் 13 சதவீதம், இரும்புச்சத்து 5 சதவீதம், இரும்புச்சத்து 15 சதவீதம் உள்ளது.
பேரிட்சை பழத்தை கரோட்டினாய்ட்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் ஃபினோலின்க் அமிலங்கள் ஆகிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், வழக்கமான குடல் இயக்கத்துக்கு வழிவகுத்து, ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது. நாளொன்றுன்னு 7 முதல் 10 பேரிட்சை பழங்கள் சாப்பிடுவதால், அது மலம் எளிதாக கழிக்க உதவுகிறது. பேரிட்சையில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள் மலத்தை கட்டியாக்குகிறது.
கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரை வைத்து மலத்தை மிருதுவாக்குகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. குடலில் உள்ள அமோனியா போன்ற நச்சுக்களை மலக்குடலுக்கு தள்ளிவிடுகிறது. அது நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.
பேரிட்சையில் கரோட்டினாய்ட்கள் அதிகம் உள்ளது. ஃபினோலிக்ஸ், ஃப்ளேவனான்ய்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது ஃப்ரி ரேடிக்கல்ஸ்களால் செல்களுக்கு ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் சேதங்களை தடுக்கிறது. உலர் பழங்களிலே பேரிட்சையில், அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது.
உலர்திராட்சைகளைவிடவும் அதிகம் உள்ளது. பேரிட்சை பழங்களை நீங்கள் வழக்கமாக உட்கொண்டால், அது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்களை வழங்கி, பல நோய்களை தடுக்கிறது. அதில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் மற்றும் அல்சைமர் ஆகிய நோய்கள் உள்ளது.
மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
பேரிட்சையில் கரோட்டினாய்ட்கள், பாலிஃபினால்கள் மற்றும் ஃபைட்டோஸ்டிரோல்கள், மூளையில் அலர்ஜிக்கு எதிரான பாதிப்புக்களை கொண்டுள்ளது. இது நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது. நினைவாற்றல் இழப்பை தடுப்பதாக விலங்கில் செய்யப்பட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன.
நரம்பு செல்களை ஆக்ஸிடேடிவ் சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. புதிய மூளை செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது. அது நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
பேரிட்சையில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளன. அது ஆரோக்கியமான செரிமானத்தைக்கொடுக்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. குறிப்பாக பிரசவ காலத்திற்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.
இதில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை கர்ப்பத்துக்கும், கரு வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதில் உள்ள இயற்கை சர்க்கரை, உடலுக்கு இயற்கையான ஆற்றலை வழங்குகிறது. இது ஒரு நல்ல ஸ்னாக் ஆகும். பேரிட்சையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளது. இதை மிதமான அளவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் இதை எடுத்துக்கொள்வது குறித்து சுகாதார ஊழியர்களிடம் கேட்கவேண்டும்.
புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்களை குறைக்கிறது.
இதில் உள்ள பீட்டா டி குளுக்கேன்கள், கேன்சர் செல்கள் வளர்வதை தடுக்கிறது. இதில் கரோட்டினாய்டுகளும் அதிகம் உள்ளது. ஃபீனோலிக்ஸ், மற்றும் மற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது. இது டிஎன்ஏ சேதத்தை தடுத்து செல்களை காக்கிறது.
இதை உட்கொள்வதால் புற்றுநோய் செல்கள் கட்டுப்படுத்தப்படுவது சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது குடல், மார்பு, புராஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.
குடலுக்கு தேவையான நல்ல நுண்ணுயிர்கள் வளர்வதற்கு உதவுகிறது.
பேரிட்சையில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான உட்பொருட்கள், வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து நுண்ணுயிர்களை காக்கிறது. இகோலி, சல்மேநெல்லா, பாசிலஸ் உள்ளிட்ட பாக்டீரியாக்கள், உணவு சாப்பிடுவதால் தொற்று மற்றும் உடல் நலக்குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.
பேரிட்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் மற்ற நுண்ணுயிர்கள் ரத்த வெள்ளை அணுக்களை வலுப்படுத்துகின்றன.
நீரிழிவு நோயை சமாளிக்க உதவுகிறது.
வீக்கத்தை குறைக்கிறது.
சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
ஆண்மையை அதிகரிக்கிறது.
எலும்புகளை வலுப்படுத்துகிறது.
நரம்பு மண்டலத்து நன்மையளிக்கிறது.
பேரிட்சை பழங்கள், உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் மற்றும் தாவர உட்பொருட்கள், செரிமானம், மூளை இயக்கம், இதய ஆரோக்கியம், கர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு உதவுகிறது.
பேரிட்சை பழங்களை அப்படியே நேரடியாக சாப்பிடலாம் அல்லது இதுபோல் பாயாசம் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம். இதை சாலட்கள், இனிப்புகள், ஸ்னாக்ஸ்களில் சேர்த்து சாப்பிடலாம். இதை உணவுகளில் சேர்க்கும்போது, நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
இதில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. மேலும் இதில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளதால், இதை உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதில் சேர்த்துக்கொள்ளலாம். பழச்சாறுகள், ஸ்மூத்திகளுடன் சேர்த்து எடுக்கலாம். ஒட்டுமொத்தமாக சரிவிகித உணவில் இது முக்கியமாக உள்ளது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்