Benefits of Cucumber Juice : வெறும் வயிற்றில் தினமும் இந்த ஜூஸ்! மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் எத்தனை நன்மைகள் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Cucumber Juice : வெறும் வயிற்றில் தினமும் இந்த ஜூஸ்! மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் எத்தனை நன்மைகள் பாருங்க!

Benefits of Cucumber Juice : வெறும் வயிற்றில் தினமும் இந்த ஜூஸ்! மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் எத்தனை நன்மைகள் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Updated Mar 25, 2024 09:07 PM IST

Benefits of Cucumber Juice : வெள்ளரிச்சாறு உடலுக்கு வழங்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Cucumber Juice : வெறும் வயிற்றில் தினமும் இந்த ஜூஸ்! மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் எத்தனை நன்மைகள் பாருங்க!
Benefits of Cucumber Juice : வெறும் வயிற்றில் தினமும் இந்த ஜூஸ்! மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் எத்தனை நன்மைகள் பாருங்க!

இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உடலில் செல்கள் இறக்க காரணமாகும் ஃப்ரி ரேடிக்கல்களை அழிக்கச்செய்கிறது. இதில் உள்ள குர்குபிட்டாசின்ஸ் போன்ற உட்பொருட்கள் பரங்கிக்காயிலும் உள்ளது.

சரும ஆரோக்கியத்துக்கு நல்லது

வெள்ளரியுடன் தேன், சாமந்தி அல்லது லாவண்டர் பூக்களை அரைத்து அதை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெரும். வெள்ளரியை ஃபிரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து, அதை வெட்டி, கண்களில் வைத்தால் உடலை குளுமையாக்கும். முகத்துக்கு பொலிதரும். கண்களில் கருவளையங்களை குணமாக்கும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது

வெள்ளரிச்சாறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற உதவுகிறது. நமது உடல் வலுப்பெற நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருக்க வேண்டும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஃபோலேட் மற்றும் சிங்க் ஆகியவை ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு மண்லத்துக்கு உதவுகிறது.

மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

தினமும் வெள்ளரிச்சாறு அருந்துவதால் மன ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் கற்றல், கவனம், நினைவாற்றல் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது உங்கள் மன தைரியத்தை அதிகரித்து, மனஅழுத்தத்தை சமநிலைப்படுத்தி, நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கும். சவாலான நேரங்களில் இந்த வெள்ளரிச்சாறு உங்களை உற்சாகமாக்கும்.

வேனிற்கட்டிகளை குணமாக்கும்

வெயிலால் ஏற்படும் வேனிற் கட்டிகளுக்கு வெள்ளரி மிகவும் சிறந்தது. இதை பேஸ்டாக்கி உங்கள் சருமத்தில் பூசினால், வேனிற்கட்டிகளை போக்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வெள்ளரி, கற்றாழை, தயிர் ஆகியவற்றை அரைத்து வேனிற்கட்டிகள் அல்லது வியர்குரு உள்ள இடத்தில் தடவவேண்டும். வெள்ளரியை பாலுடன் அரைத்தும் பூச பலன் கிட்டும்.

செரிமானத்துக்கு உதவுகிறது

வெள்ளரிச்சாறு செரிமானம் மற்றும் வளர்சிதைக்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக கால்சியம் இதற்கு காரணமாகிறது. இது வளர்சிதை எண்சைம்களுடன் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவுடன் ஒரு டம்ளர் வெள்ளரிச்சாறு பருகுவது நல்லது.

எலும்பு ஆரோக்கியம்

வெள்ளரியில் உள்ள கால்சியச்சத்து செரிமானத்துக்கு மட்டுமல்ல, எலும்புகள் வலுப்பெறவும் உதவுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும், அமைப்புக்கும் உதவுகறிது. ஆரோக்கிய உடலுக்கு எலும்புகள்தான் அடிப்படை. எனவே இந்த சாறை பருகி எலும்பு ஆரோக்கியம் பெறுங்கள்.

ஆரோக்கியமான இதயம்

வெள்ளரி சாறில் உள்ள வைட்டமினி பி1, உங்கள் இதயத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தியாமின் (வைட்டமின் பி1) இதயம் வழக்கமாக இயங்க உதவுகிறது. வைட்டமின் சி உங்கள் ரத்த நாளங்கள் வலுவுடனும், நெகிழ்தன்மையுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

தசைகளுக்கு நல்லது

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு தசைகள் மிகவும் முக்கியம். ஆரோக்கியமான முறையில் வயோதிகத்தை எட்டுவதற்கும், உடலை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளவும் தசை ஆரோக்கியம் மிகவும் அவசியம். உங்கள் தசைகளை வலுவுடனும், நெகிழ்தன்மையுடனும் வைத்துக்கொள்வதும் அவசியம். இதில் உள்ள பொட்டாசியச்சத்துக்கள் தசை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

கழிவு நீக்கம்

உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றுவதில் இந்த சாறுக்கு நிகர் வேறொன்றும் இல்லை.

நீர்ச்சத்து

உடலை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கிறது. இயற்கை எலக்ட்ரோலைட் பானமாகும். வறட்சி, நோய் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காலங்களில் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

மயக்கம்

வெயிலால் ஏற்படும் மயக்கத்தை தடுக்கிறது. வேலையால் சோந்து போனீர்கள் என்றால், அதை நீக்குகிறது. இதில் உள்ள மினரல்களும், வைட்டமின்களும் சோர்வை போக்க உதவுகிறது. உங்களை ஆற்றலுடன் வைத்துக்கொள்கிறது.

உடலுக்கு இத்தனை நன்மைகளை வழங்கும் வெள்ளரியில் சாறு பிழிந்து சிறிது இந்துப்பு சேர்த்து பருகி பலன் பெறுங்கள்.