Benefits of Cluster Beans : ஒன்றா ரெண்டா? கொத்தவரங்காயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் எத்தனை! மருத்துவர் கூறுவது என்ன?
Benefits of Cluster Beans : கொத்தவரங்காயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் கூறுவது என்ன?

சமையலறையில் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் காய்களுள் ஒன்றாகவும், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் காய்களுள் ஒன்றாகவும் கொத்தவரங்காய் உள்ளது. அதை நாம் சமையலில் பயன்படுத்த அதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் தான் காரணமாகிறது. அதன் எண்ணற்ற நன்மைகள் குறித்து மருத்துவர் காமராஜ் கூறுகிறார். அதுகுறித்த விவரங்களைப் பாருங்கள். இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு உடல் எடையை மேலாண்மை செய்யவும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
கொத்தவரங்காயின் நன்மைகள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இது உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உங்களுக்கு வழங்குகின்றன. இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் பி6 நரம்பு மண்டல ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் கொத்தவரங்காய் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமானது. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துக்களையும் உங்கள் உணவுக்கு கொடுக்கிறது.
உடல் எடை மேலாண்மை
கொத்தவரங்காய் உங்கள் உடல் எடை மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடல் எடையைக் குறைக்கவும் அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணரவைக் கொடுத்து உங்களின் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவதும், அதிக கலோரிகள் இருப்பதும் தடுக்கப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், தங்கள் உடல் எடையைக் குறைக்க கொத்தவரங்காயைப் பயன்படுத்தலாம்.