Benefits of Clove : இயற்கை வலி நிவாரணி; செரிமானத்துக்கு உதவும் கிராம்பில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!-benefits of clove natural pain reliever see how many benefits of cloves help digestion - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Clove : இயற்கை வலி நிவாரணி; செரிமானத்துக்கு உதவும் கிராம்பில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Benefits of Clove : இயற்கை வலி நிவாரணி; செரிமானத்துக்கு உதவும் கிராம்பில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 16, 2024 09:59 AM IST

Benefits of Clove : இயற்கை வலி நிவாரணி; செரிமானத்துக்கு உதவும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற உதவும் என கிராம்பில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்.

Benefits of Clove : இயற்கை வலி நிவாரணி; செரிமானத்துக்கு உதவும் கிராம்பில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!
Benefits of Clove : இயற்கை வலி நிவாரணி; செரிமானத்துக்கு உதவும் கிராம்பில் எத்தனை நன்மைகள் பாருங்கள்!

செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது

கிராம்பு பாரம்பரியமாக செரிமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவை செரிமான எண்சைம்களை தூண்டுகிறது. அது உணவை மேலும் நன்றாக உடைக்க உதவுகிறது. இதனால் செரிமானமின்மை, வாயு மற்றும் உப்புசம் போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படுகிறது. தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவது உங்களின் வயிறு தொடர்பான அசவுகர்யங்களைப் போக்குகிறது.

இயற்கை வலி நிவாரணி

கிராம்பில் ஈஜினால் என்ற உட்பொருள் உள்ளது. அது உங்களுக்கு இயற்கை வலி நிவாரணியாக உள்ளது. கிராம்பு எண்ணெய் அல்லது கிராம்பை கடிப்பது பற்களில் உள்ள வலிகளைப் போக்குகிறது. டேலும் ஈறுகளின் புண்களை ஆற்றுகிறது. வாய்ப்புண்களுக்கும் மருந்தாகிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வலி மற்றும் வீக்கத்தை குறைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

கிராம்பில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. வைட்டமின் சி மற்றும் ஈஜினால் போன்றவை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்குகிறது. உடலில் ஃப்ரி ராடிக்கல்களை விரட்டுகிறது. கிராம்பு எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள நாள்பட்ட நோய்களை தீர்க்கும். இதய நோய், சில புற்றுநோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. உடலில் உள்ள ஆபத்து விளைவிக்கும் ஃப்ரி ராடிக்கல்களை முறைப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற உதவுகிறது

கிராம்பில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள், கிராம்பை இயற்கை நோய் எதிர்ப்பாற்றல் ஊக்கியாக செயல்பட வைக்கிறது. எனவே கிராம்பு சாப்பிடுவது உங்கள் உடலில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. உங்கள் உடலில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்ஜைகளால் தொற்றுகள் ஏற்பட்டிருக்கும். கிராம்பின் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், சுவாசக்கோளாறுகள், சளி, இருமல், தொண்டைக்கம்மல் ஆகியவற்றை சரிசெய்கிறது.

பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கிராம்பு உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது பாரம்பரியமாக பல ஆண்டுகளாக உங்கள் வாய் மற்றும் பல் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் உள்ள ஆன்டி செப்டிக் குணங்கள், உங்கள் வாயில் உள்ள ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்கிறது. உங்களுக்கு ஜிஞ்ஜிவிட்டிஸ், பெரிடோனிட்டிஸ் மற்றும் கேவிட்டிஸ் போன்ற வாய் தொடர்பான வியாதிகள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. கிராம்புகள் உங்களுக்கு சுவாச புத்துணர்ச்சியைத் தருகிறது. வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அடித்து விரட்டுகிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

கிராம்பு உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது அல்லது நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் பலன் தருகிறது. இது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடலில் முறையாக இன்சுலின் சுரக்க வழிவகுக்கிறது. எனவே உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த தினமும் ஒரு கிராம்பு எடுத்துக்கொள்வது அவசியம்.

கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் குறிப்பாக ஈஜினால்கள், உங்கள் கல்லீரலில் உள்ள கழிவை நீக்குகிறது. வீக்கத்தை குறைக்கிறது. கிராம்பு உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரித்து, அதை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. உங்கள் உடலில் கழிவுகள் ஏற்படுத்தும் ஆபத்தான பாதிப்புக்களை போக்குகிறது. இது உங்களுக்கு ஃபேட்டி லிவர் நோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கிராம்பில் உள்ள உட்பொருட்கள், சளி மற்றும் நாள்பட்ட சளியை போக்கும் திறன் கொண்டது. இது சளியை இளக்கி வெளியேற்றுகிறது. இதனால் சளி, இருமல், சுவாசக்கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கிராம்பு எண்ணெய் சேர்த்து ஆவி பிடிக்கும்போது, அது உங்களின் சுவாசப்பாதைக்கு இதமளிக்கிறது. சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது.

எலும்பு ஆரோக்கியம்

கிராம்புகளில் மாங்கனீஸ் அதிகம் உள்ளது. அது எலும்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாங்கனீஸ் எலும்பு மற்றும் குறுத்தெலும்புகள் அதில் இருந்து திசுக்கள் உருவாக உதவுகிறது. எனவே நீங்கள் கிராம்பு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால், அது உங்களிளுக்கு எலும்புப்புரை உள்ளிட்ட எலும்பு தொடர்பான நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கிராம்பு எண்ணெய் மற்றும் அதன் நுண்ணுயிர்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், சருமத்துக்கு மிகவும் நல்லது. சருமத்தில் கிராம்பு எண்ணெயை தடவுவது உங்கள் முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். வீக்கத்தை குறைக்கிறது. தொற்றுகள் பரவுவதை தடுக்கிறது. தினமும் கிராம்பு உட்கொள்வது நீங்கள் ஆரோக்கிய சருமத்தைப் பெற உதவுகிறது.

எப்படி சாப்பிட வேண்டும்?

கிராம்பின் நன்மைகள் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டுமெனில், ஒரு கிராம்பை தினமும் காலையில் மென்று சாப்பிடவேண்டும் அல்லது காலையில் பருகும் பானங்கள் அல்லது உணவுடன் எடுத்துக்கொள்ளலாம். துவங்கும்போது கொஞ்சம் மட்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும். போகப்போக அளவைக் அதிகரிக்க வேண்டும். அதிக கிராம்பு உட்கொள்வது உங்களின் செரிமான மண்டலத்துக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்துகிறது. இது சில மருந்துகளுடன் வினைபுரியக்கூடியது. எனவே நீங்கள் இதை வழக்கமாக எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவருடன் உரையாடுவது நல்லது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.