Benefits of Citrus Fruits : தினமும் உணவில் சிட்ரஸ் பழங்கள்! நீர்ச்சத்து முதல் நோய் எதிர்ப்பு வரை இத்தனை நன்மைகளா?
Benefits of Citrus Fruits : தினமும் ஒரு சிட்ரஸ் பழக்தையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்று தெரியுமா? இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

தினமும் பழங்கள் சாப்பிட வேண்டியதன் அவசியத்தை நமது முன்னோர்கள் காலங்காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். பழங்களில் எண்ணிலடங்கா ஆரோக்கியமும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. ஆனாலும், சிட்ரஸ் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவது ஏன் தெரியுமா?
ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள்
சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் கரோட்டனாய்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உங்கள் உடலில் உள்ள செல்கள் சேதம் அடையாமல் காக்கின்றன. நாட்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கிறது. இவற்றை தினமும் உட்கொண்டாலே உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உடலில் நீர்ச்சத்து பராமரிக்கப்படுகிறது
சிட்ரஸ் பழங்கள் அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை நீர்ச்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ்களாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம் ஆகிறது.
