Benefits of Cinnamon : பிரியாணிக்கு மணம் சேர்ப்பது மட்டுமல்ல; பெண்களின் பிசிஓஎஸ் பிரச்னைக்கும் தீர்வு கொடுப்பது இதுதான்!
Benefits of Cinnamon : உங்கள் அன்றாட உணவில் பட்டையை சேர்த்துக்கொள்வதன் மூலம் பெண்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும் எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் அன்றாட உணவில் பட்டையை சேர்த்துக்கொள்வதன் மூலம் பெண்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும் எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் அவர்களின் மாதவிடாய் மற்றும் பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கும் பட்டையை அன்றாட உணவில் சேர்த்து பலன்பெறுங்கள்.
உங்கள் அன்றாட உணவில் பட்டையை சேர்த்துக்கொள்வது
பட்டை உங்கள் உடலுக்கு பல்வேற நன்மைகளை கொடுக்கும் ஒரு வாசனைப் பொருள் ஆகும். இதை தினமும் உங்கள் பானங்களில், டீயில், சூப்களில், இனிப்புகளில், மசாலாக்களில், குழம்புகளில் சேர்த்துக்கொள்வது பெண்களின் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. அதற்கான உட்பொருட்களை கொண்டது இந்த பட்டை.
மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது
உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது. அது ஹார்மோன் சமநிலைலை முறையாக்கி, ரத்த ஒட்டத்தை கருப்பைக்கு அதிகரித்து, ஹார்மோன் சமநிலையை பேணிக்காக்கிறது. பட்டை கலந்த தண்ணீரை குடிக்கும்போது, உங்கள் மாதவிடாய் சுழற்சி முறையாகிறது. உங்களுக்கு ஏற்படும் வலி நிறைந்த மாதவிடாய் நாட்களில் வலியை குறைக்கிறது.
பிசிஓஎஸ் அறிகுறிகளை குறைக்கிறது
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும், பிசிஓஎஸ் பிரச்னைகளின் அறிகுறிகளை பட்டை குறைக்கிறது. மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்தி, அது கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரித்து, பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
உங்கள் உடலில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை பட்டை அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. எனவே பட்டையை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் நிறைந்துள்ளது. அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சினமல்டேஹைட் போன்ற உட்பொருட்கள், உடலில் நோய் எதிர்ப்பை அதிகரித்து, தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. ‘
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பட்டை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்கள் அளவை குறைத்து, இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதன் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் இயக்கம் மற்றும் வீக்கத்தை குறைத்து இதய ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தி, உடல் எடை குறைப்பில் உதவுகிறது. பசியை தடுக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதை சரிவிகித உணவில் சேர்த்துக்கொண்டு, போதிய உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது
பட்டையை அடிக்கடி உட்கொள்வது, உடலில் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அது வயிறு உப்புசத்தை குறைக்கிறது. வயிறு அசவுகர்யங்களை தடுக்கிறது. உடலுக்கும் வலு சேர்க்கிறது.
கருத்தரிக்கும் விகிதத்தை அதிகரிக்கிறது
பட்டை, கருத்தரிக்கும் விகிதத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது கருத்தரிக்க தேவையான ஹார்மோன்களை சுரக்கச்செய்கிறது. எனவே தினமும் பட்டை தண்ணீரை பருகவேண்டும். அது அவர்களுக்கு கருவுறுதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்