Benefits of Chickpea : தினம் ஒரு தானியம்! ஒரு கைப்பிடியளவுதான்; உடலுக்கு கிடைப்பதோ எண்ணிலடங்கா நன்மைகள்!
Benefits of Chickpea : தினம் ஒரு தானியம்! ஒரு கைப்பிடியளவுதான்; உடலுக்கு கிடைப்பதோ எண்ணிலடங்கா நன்மைகள்!
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
ஒரு கப் கொண்டைகடலையில் 269 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 14.5 கிராம், கொழுப்பு 4 கிராம், கார்போஹைட்ரேட் 45 கிராம், நார்ச்சத்துக்கள் 12.5 கிராம், மாங்கனீசு 74 சதவீதம், ஃபோலேட் 71 சதவீதம், காப்பர் 64 சதவீதம், இரும்புச்சத்து 26 சதவீதம், சிங்க் சத்து 23 சதவீதம், பாஸ்பரஸ் 22 சதவீதம், மெக்னீசியம் 19 சதவீதம், தியாமைன் 16 சதவீதம், வைட்டமின் பி6 13 சதவீதம், செலினியம் 11 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 10 சதவீதம் நிறைந்துள்ளது.
வயிறு நிறைந்த உணர்வை தரும்
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுக்குள் வைக்கிறது. தாமதமாக செரிப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, பசியை குறைக்கும் ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வது தடுக்கப்படுகிறது.
தாவர புரதம் நிறைந்தது
கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இறைச்சி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த உணவு. புரதச்சத்து எடை மேலாண்மை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசையை வலுப்படுத்த உதவுகிறது. கொண்டைக்கடலையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களில் உள்ள புரதத்தைவிட சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது
இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் என்பதால், இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுப்படுத்தி நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வதை தடுக்கிறது.
ரத்தச்சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
கொண்டைகக்டலை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து கார்போஹைட்ரேட் உறிஞ்சுவதை தாமதப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு நிலையாக உயர்கிறது.
செரிமானத்துக்கு நன்மையளிக்கிறது
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான மண்டலத்துக்கு நன்மையளிக்கிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. அது உங்கள் வயிற்றில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. இது செரிமான கோளாறு முதல் குடல் புற்றுநோய் வரை தடுக்கிறது.
நாள்பட்ட நோய்களை குறைக்கிறது
இதய நோய்
இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசிய சத்துக்கள், ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தியும் இவை இதயத்துக்கு நன்மை கொடுக்கின்றன.
புற்றுநோய்
கொண்டைக்கடலையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் அது சில புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. உடலில் பட்ரேட் என்ற ஃபேட்டி ஆசிட் சுரப்பை அதிகரித்து, குடல் செல்களில் அழற்சியை குறைத்து, குடல் புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது. இதில் சேபொனின் என்ற சத்து உள்ளது. அதுவும் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.
சர்க்கரை நோய்
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கும் என்பதால், கொண்டைக்கடலை, சர்க்கரை நோயை தடுக்க உதவுகிறது. சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு அதிகரிப்பதை இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து தடுக்கிறது. இது சர்க்கரை நோய் மேலாண்மையில் மிக முக்கியமானது. இதில் உள்ள சிங்க் சத்தும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மூளை இயங்குவதற்கும், மன ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதில் உள்ள சோலைன் மூளை இயங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சோலைன் நரம்பு செல்கள் இயங்கவும் உதவுபவை. குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியம். இதில் உள்ள மெக்னீசியச்சத்து நரம்பு இயங்க முக்கியமான ஒன்று. இதில் உள்ள மெக்னீசியம், சிங்க மற்றும் செலினிய சத்துக்கள் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது.
இரும்புச்சத்து குறைபாட்டை போக்குகிறது
கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து நிறைய உள்ளது. இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும், தசை வளர்ச்சிக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இரும்புச்சத்து இல்லாவிட்டால் உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி தடைபட்டு, இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, உடல் சோர்வு, மயக்கம், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டால் அவர்களுக்கு கொண்டைக்கடலை ஒரு சிறந்த தேர்வு
விலையும் குறைவானது
இது மலிவான விலையில் கிடைக்கக்கூடியது. அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கும். எனவே வெள்ளை, பிரவுன், சிறியது, பெரியது என அனைத்து வகை கொண்டைக்கடலைகளையும் வாங்கி உண்ணுங்கள். இது சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்தை வழங்கக்கூடிய முக்கியமான ஒன்று. இதை ஸ்னாக்ஸாக கூட ஒரு கைப்பிடியளவு தினமும் சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியத்தையும் வழங்கும்.
டாபிக்ஸ்