Benefits of Chana Dal : தினம் ஒரு தானியம்! எலும்பை இருப்பாக்கும்! கரு வளர்ச்சிக்கு உதவும்! கடலை பருப்பின் நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Chana Dal : தினம் ஒரு தானியம்! எலும்பை இருப்பாக்கும்! கரு வளர்ச்சிக்கு உதவும்! கடலை பருப்பின் நன்மைகள்!

Benefits of Chana Dal : தினம் ஒரு தானியம்! எலும்பை இருப்பாக்கும்! கரு வளர்ச்சிக்கு உதவும்! கடலை பருப்பின் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Mar 18, 2024 08:00 AM IST

Benefits of Chana Dal : எலும்பை இரும்பாக்கும் கடலை பருப்பில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மட்டும் கிடையாது. இதை பல வழிகளில் சமைக்கவும் முடியும்.

Benefits of Chana Dal : தினம் ஒரு தானியம்! எலும்பை இருப்பாக்கும்! கரு வளர்ச்சிக்கு உதவும்! கடலை பருப்பின் நன்மைகள்!
Benefits of Chana Dal : தினம் ஒரு தானியம்! எலும்பை இருப்பாக்கும்! கரு வளர்ச்சிக்கு உதவும்! கடலை பருப்பின் நன்மைகள்!

பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது

இதில் அதிகளவில் கால்சிய சத்து உள்ளது. அது வலுவான எலும்பு மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது. எனவே உங்கள் எலும்பு மண்டலத்தை வலுப்படுத்த உணவில் அடிக்கடி கடலை பருப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

கடலை பருப்பு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையில் அளவு அதிகம் இருந்தால், இந்த பருப்பை சேர்த்துக்கொள்வதன் மூலம் பலன் பெறலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. இது உடலில் மெதுவாக குளுக்கோஸை வெயிட்டு ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

நீங்கள் எடை குறைக்க விரும்பினால், கடலை பருப்பு அதற்கு உதவும். இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளது. அது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. தேவையற்ற சாப்பிடவேண்டும் என்ற தூண்டலையும் குறைக்கிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தசைகளை வலுப்படுத்துகிறது

தசைகளை வலுப்படுத்த, கடலை பருப்பில் உள்ள புரதச்சத்து உதவுகிறது. நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் உங்களுக்கு கடலை பருப்பு அதற்கு சிறந்த புரதச்சத்துக்கள் நிறைந்த தாவர உணவு. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் அன்றாட புரத அளவை பெறமுடியும். இது உங்கள் தசை வளர்ச்சியை அதிகரிக்கிறது. திசுக்களை சேதப்படுத்துகிறது.

அமில அளவை பராமரிக்கிறது

இதில் உள்ள ஆல்கலைனின் தரம், உங்கள் உடலில் அமில அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. இந்த ஆல்கலைன் செரிமானத்துக்கு உதவும். உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கடலை பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களால் அதிக நன்மைகள் கிடைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நீண்ட காலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த காரணமாகிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படுகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

கடலை பருப்பில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கியமானது. இதில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. அது உங்கள் உடல் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. உங்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

கர்ப்ப காலத்திற்கு சிறந்த உணவு

கர்ப்ப காலம் என்பது தாய் மற்றும் கரு இருவருக்கும் முக்கியமான காலம். கர்ப்ப காலத்தில் கடலை பருப்பு எடுத்துக்கொள்ளும்போது, அது ஆரோக்கியமான கர்ப்ப காலம் மற்றும் கரு வளர்ச்சிக்கு தேவையான மினரல்களைக் கொடுக்கிறது. இதில் ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது கர்ப்ப காலத்திற்கு சிறந்த உணவாகிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

பல்வேறு நீண்ட கால நோய்களுக்கு காரணம் உடலில் உள்ள வீக்கம்தான். இதில் வீக்கத்துக்கு எதிரான நற்குணங்கள் உள்ளது. அது உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது. பல்வேறு வியாதிகளையும் தவிர்க்க உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.