தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Cauliflower : எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த காலிஃப்ளவர்! யார் சாப்பிடலாம்? எப்படி சாப்பிடவேண்டும்?

Benefits of Cauliflower : எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த காலிஃப்ளவர்! யார் சாப்பிடலாம்? எப்படி சாப்பிடவேண்டும்?

Priyadarshini R HT Tamil
Jul 06, 2024 10:36 AM IST

Benefits of Cauliflower : எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த காலிஃப்ளவர் என்று தெரியுமா? அதே நேரத்தில் யார் சாப்பிடலாம் எனவும், எப்படி சாப்பிடவேண்டும் என்பதையும் பாருங்கள்.

Benefits of Cauliflower : எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த காலிஃப்ளவர்! யார் சாப்பிடலாம்? எப்படி சாப்பிடவேண்டும்?
Benefits of Cauliflower : எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த காலிஃப்ளவர்! யார் சாப்பிடலாம்? எப்படி சாப்பிடவேண்டும்?

காலிஃப்ளவரின் நன்மைகள்

கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் 5 கிராம் மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. 30 கலோரிகள் மட்டுமே கொண்டது. கர்போஹைட்ரேட் குறைவான உணவு உட்கொள்ளவேண்டும் என்று எண்ணுபவர்கள் இதை எடுத்துக்கொள்வது நல்லது. காலிஃப்ளவரில் வயோதிகத்தை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான தன்மைகள் உள்ளது.

ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது

ஒரு கப் காலிஃப்ளவரில் 2.14 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் எடையை மேலாண்மை செய்ய உதவும். நார்ச்சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தந்து, உங்களை வேறு எதுவும் உட்கொள்ள முடியாமல் செய்துவிடுகிறது. அதில் 3.5 அவுன்ஸ் தண்ணீரும் உள்ளது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.