தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Remedy: விளக்கெண்ணெய்யில் நிறைந்துள்ள வியக்க வைக்கும் நன்மைகள்

Home remedy: விளக்கெண்ணெய்யில் நிறைந்துள்ள வியக்க வைக்கும் நன்மைகள்

I Jayachandran HT Tamil
Mar 25, 2023 12:01 AM IST

விளக்கெண்ணெய்யில் நிறைந்திருக்கும் வியக்க வைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

விளக்கெண்ணெய்யில் நிறைந்துள்ள வியக்க வைக்கும் நன்மைகள்
விளக்கெண்ணெய்யில் நிறைந்துள்ள வியக்க வைக்கும் நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் இருக்கும் நன்மைகள் வேறெந்த கெமிக்கல் கிரீம்களுக்கும் ஈடுகொடுக்க முடியாது. அந்த வகையில் விளக்கெண்ணெய்யும் முக்கிய இடம் பெறுகிறது.

விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் என்பது ஆமணக்கு என்னும் தாவரத்தின் விதைகளிளிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ரிசினஸ் கம்யூனிஸ் ஆகும்.

இது கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியதாக சொல்லப்பட்டாலும் இந்தியாவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஒப்பனை மற்றும் மருத்துவத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய் பார்ப்பதற்கு ஒளி ஊடுவகூடிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். இது பல்வேறு சமயங்களில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

விளக்கெண்ணெய் நன்மைகள் :

விளக்கெண்ணெய் சிறுகுடலில் ரிசினோலிக் எனப்படும் அமிலமாக உடைக்கப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. மற்றும் முகம், தோல் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கிறது.

ஆமணக்கு எண்ணெய் மற்றும் ரிசினோலிக் அமிலம் ஆகியவை சருமத்தின் உறிஞ்சுதலை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது.

சில சமயங்களில் டெர்மடோசிஸ், சொரியாசிஸ் மற்றும் முகப்பரு உள்ளிட்ட பல்வேறு தோல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

இது கண் இமை மற்றும் தலையில் முடி வளர்வதை ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது.

மாய்ஸ்சரைசர் :

முகத்தை சுத்தம் செய்தபின், எப்போதும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். ஏனெனில் ஆரோக்கியமான சருமத்திற்கு ஈரப்பதம்தான் முக்கியம்.

ஆமணக்கு எண்ணெயை 1 முதல் 2 சொட்டு எடுத்து, முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும் அல்லது இதை தினசரி மாய்ஸ்சரைசருடன் கலந்து பயன்படுத்தலாம்.

மலச்சிக்கல் :

ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இது வாய் வழியாக எடுத்துக் கொள்ளும்போது, சிறு குடலில் ​​ரிசினோலிக் அமிலம் வெளியிடப்படுகிறது.

பின்னர் இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படத் தொடங்குகிறது.

ஆமணக்கு எண்ணெய் வெப்பத்தை உருவாக்கி செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. மற்றும் சரியான குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலம் செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது.

கரும்புள்ளிகள் அகற்ற :

விளக்கெண்ணெயில் சில துளிகள் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

நன்கு கலந்து முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்ப்பதால் கருமையான புள்ளிகளை அகலும்.

கீழ்வாதம் :

மூட்டு வலிகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவத்தில் பழங்காலத்திலிருந்தே ஆமணக்கு எண்ணெய் கீல்வாதம் வலி, வீக்கம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெயில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது மசாஜ் செய்வதற்கு சிறந்த தாக உள்ளது.

எனவே இது தசைகள் மற்றும் மூட்டுகளில் பயன்படுத்தப் படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் ஆமணக்கு எண்ணெய் மற்றும் சூடான தண்ணீர் பேக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், சிறிது நேரத்தில் வலி குறைவதை உணரலாம்.

முடியை வளர விளக்கெண்ணெய் :

நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு முறை ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்வதன் மூலம்,

தலைமுடி வேகமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெயில் உள்ள ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்களுக்குச் சென்று இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மேலும் இந்த எண்ணெயில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்தவும் உதவுகிறது.

முகப்பரு :

விளக்கெண்ணெய் முகப் பருவுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. இந்த எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் முகப்பருவை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த இயற்கையான மருந்தாக விளங்குகிறது.

இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி, நுண்துளைகளை அடைக்கக்கூடிய பாக்டீரியாக்களை அளிக்கிறது. மேலும் சருமத்தை மென்மையாக்குகிறது.

கடுக்காய்ப் பொடியுடன் சிறிது ஆமானக்கு எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அஜீரணம், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் புழுக்கள் குணமாகும்.

கண் பராமரிப்பு:

கண்களின் வீக்கம் அல்லது சோர்வாக இருந்தால் விளக்கெண்ணெய் பயன்படுத்தலம். உள்ளங்கையில் அல்லது ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெயை சில துளிகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மோதிர விரலைப் பயன்படுத்தி, வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.

இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கண்களை தளர்த்தும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு புருவங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்