தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Cardamom : வாசத்துக்கு மட்டுமல்ல; இந்த ஏலக்காயில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்!

Benefits of Cardamom : வாசத்துக்கு மட்டுமல்ல; இந்த ஏலக்காயில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 23, 2024 11:13 AM IST

Benefits of Cardamom : இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள நன்மைகள் என்ன தெரியுமா?

Benefits of Cardamom : வாசத்துக்கு மட்டுமல்ல; இந்த ஏலக்காயில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்!
Benefits of Cardamom : வாசத்துக்கு மட்டுமல்ல; இந்த ஏலக்காயில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள நன்மைகள் என்ன தெரியுமா?

செரிமானத்தை அதிகரிக்கிறது

ஏலக்காய் செரிமானத்துக்கு தேவையான எண்சைம்களை சுரக்கிறது. இதனால் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுவலி போன்ற பொதுவான வயிறு வலி பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

புத்துணர்ச்சியான சுவாசம்

இயற்கையில் உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கி, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

ஏலக்காயில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வீக்கத்தை குறைப்பதுடன், ஆஸ்துமா மற்றும் ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

இயற்கையில் ரத்தத்தை நீர்க்கச்செய்கிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது. இதயநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. மேலும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை காக்கிறது.

கழிவுநீக்கி

ஏலக்காய், சிறுநீரை அதிகரித்து, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது சிறுநீரக செயல்பாட்டை அதிகரித்து, ஒட்டுமொத்த கழிவையும் வெளியேற்றுகிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

ஏலக்காயை நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது, அது ரத்த அழுத்த அளவுகளில் நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ஏலக்காய் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது ஃப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இது புற்றுநோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. மேலும் வயோதிகத்தை மெதுவாக்குகிறது.

மன ஆரோக்கியம்

ஏலக்காய், பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கிறது. இது மனதை அமைதிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும் பயம் மற்றும் பதற்றத்தை குறைத்து, உங்கள் மனநிலையை மாற்றுகிறது.

ஆன்டிமைக்ரோபயல் நடவடிக்கை

ஏலக்காயில் உள்ள ஆன்டி மைக்ரோபயல் நடவடிக்கைகள், பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் எதிர்த்து போராட உதவுகிறது. இது உடலின் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.

இதில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், இது மிக குறைவான அளவே உட்கொள்ளப்படவேண்டும்.

இதை எப்படி உணவில் சேர்ப்பது?

கேக்குகள், குக்கிகள், பிரட்கள் உள்ளிட்ட பேக்கிங் உணவுகள் தயாரிக்கும்போது அதில் ஏலக்காய்ப் பொடியை வாசத்துக்காக சேர்த்துக்கொள்ளலாம்.

ஏலக்காயில் தேநீர் தயாரிக்கலாம் அல்லது நீங்கள் பருகும் தேநீரில் சேர்க்கலாம்.

நீங்கள் சமைக்கும் கார உணவுகளிலும் இதை சேர்க்கலாம். பிரியாணி, கிரேவிகள் உள்ளிட்டவற்றிற்கு தனிச்சுவை மற்றும் மணம் கொடுப்பதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீங்கள் தினமும் பருகும் காபி, ஹாட் சாக்லேட், ஸ்மூத்திகளில் ஏலக்காயை சேர்த்தால் நல்ல மணம் கிடைக்கும். மேலும் இதன் மருத்துவ குணங்களும் அதிகரிக்கும்.

இது அதிக சுவை தரும் என்பதால் துளி அளவுதான் எதிலுமே சேர்க்கவேண்டும். நன்மைகள் பல தரும் ஏலக்காயை அன்றாட உணவில் சேர்த்து பலன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்