Benefits of Cabbage : உடலுக்கு ஆற்றல், செரிமானம், இதய பாதுகாப்பு என எத்தனை நன்மைகளை தருகிறது முட்டைக்கோஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Cabbage : உடலுக்கு ஆற்றல், செரிமானம், இதய பாதுகாப்பு என எத்தனை நன்மைகளை தருகிறது முட்டைக்கோஸ்!

Benefits of Cabbage : உடலுக்கு ஆற்றல், செரிமானம், இதய பாதுகாப்பு என எத்தனை நன்மைகளை தருகிறது முட்டைக்கோஸ்!

Priyadarshini R HT Tamil
Jul 07, 2024 09:21 AM IST

Benefits of Cabbage : உடலுக்கு ஆற்றல், செரிமானம், இதய பாதுகாப்பு என எத்தனை இந்த முட்டைக்கோஸ் தருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Cabbage : உடலுக்கு ஆற்றல், செரிமானம், இதய பாதுகாப்பு என எத்தனை நன்மைகளை தருகிறது முட்டைக்கோஸ்!
Benefits of Cabbage : உடலுக்கு ஆற்றல், செரிமானம், இதய பாதுகாப்பு என எத்தனை நன்மைகளை தருகிறது முட்டைக்கோஸ்!

நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளவேண்டிய அளவில் 54 சதவீதம் வைட்டமின் சி சத்து உள்ளது. 85 சதவீதம் வைட்டமின் கே உள்ளது. நார்ச்சத்து 2 கிராமுக்கு மேல் உள்ளது. ஒரு கிராம் புரதச்சத்து உள்ளது.

முட்டைக்கோஸ் பொட்டாசியம் அதிகம் உள்ள ஒன்றாகும். இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பச்சை காய்கறிகளே நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

முட்டைகோஸின் நன்மைகள்

வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது

முட்டைக்கோஸில் உள்ள ஆந்தோசியானின்கள், இயற்கை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். இந்த ஆந்தோசியானின்கள் பழங்களுக்கு நிறங்களை மட்டும் தருவதில்லை. அவை வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. நாள்பட்ட வீக்கம் இதய நோய், புற்றுநோய், ஆர்த்ரிட்டிஸ் மற்றும் மற்ற மருத்துவ பிரச்னைகளுடன் தொடர்புடையது. ஆந்தோசியானின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உங்களை வலுவாக வைக்கிறது

வைட்டமின் சி, ஆஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இது உங்களுக்கு கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இது உங்கள் உடல் தாவர உணவுகளை உறிஞ்ச உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

ஃபைட்டோஸ்டிரோல்கள் நிறைந்தது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களால், முட்டைக்கோஸ் உங்கள் உடலின் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் குடல் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. 

முட்டைக்கோஸ் உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. இதனால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதுகாக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆரோக்கியமாக உடல் எடை குறைய முட்டைக்கோஸ் உதவுகிறது. நார்ச்சத்து என்பது செரிக்க முடியாத அல்லது உறிஞ்சப்பட்ட கார்போஹைட்ரேட் ஆகும். இது உணவுக்கு நிறைவான உணர்வைத்தருகிறது. உங்கள் வயிற்றில் அதிக இடத்தை எடுத்துக்கொண்டு, உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது.

உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது

இதில் உள்ள ஆந்தோசியானின்கள், வீக்கத்தை குறைக்க அதிகம் உதவுகிறது. உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்க வேண்டுமானால், நீங்கள் அதிகளவில் முட்டைகோஸ்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. முட்டைக்கோஸில் 36 வெவ்வேறு வகை ஆந்தோசியானின்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார். அது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு ஒரு சிறப்பான தேர்வு ஆகும்.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பொட்டாசியம் என்பது ஒரு மினரல் மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும். அது உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு கப் சிவப்பு முட்டைக்கோஸ் உங்களுக்கு 6 சதவீதக்கும் மேல் ஆரோக்கியமான பொட்டாசியத்தை வழங்குகிறது. இந்தளவு ஒரு நாளுக்கு பரிந்துரைக்கப்படும் அளவு. இது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து, உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

கொழுப்பை குறைக்கிறது

அதிகளவிலான கெட்ட கொழுப்புதான் உடலில் இதய கோளாறுகளை ஏற்படுத்தும். உங்கள் தமனிகளில் அது அதிகளவில் படிந்துவிட்டால் ஆபத்துதான். முட்டைக்கோஸில் இரண்டு உட்பொருட்கள் உள்ளது, நார்ச்சத்துக்கள் மற்றும் ஃபைட்டோஸ்டீரால்கள் என்பவை ஆகும். இது கெட்ட கொழுப்புடன் போட்டியிட்டு உங்கள் செரிமான மண்டலத்தால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இவை உங்களின் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் ஒன்று சேர்வதை தடுக்கிறது. உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் கே மிகவும் முக்கியமாகும். உங்களுக்கு எலும்புப்புரை போன்ற நோய்களை ஏற்படுத்து ஆபத்தை வைட்டமின் கே குறைபாடு கொண்டுவந்து சேர்க்கும். உங்கள் ரத்தமும் அது இல்லாவிட்டால் சரியாக உறையாது. எனவே வைட்டமின் கே அதிகம் உள்ள முட்டைக்கோஸை உங்கள் அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு கப் முட்டைக்கோஸில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நாளின் அளிவில் 85 சதவீதம் உள்ளது.

வைட்டமின் கே, நமது எலும்புகளை வலுவாக்குகிறது. ரத்தத்தை நன்றாக உறைய வைக்கிறது. முட்டைக்கோஸ் உங்கள் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் கேவைக் கொடுக்கிறது. எனவே அதை கட்டாயம் எடுத்து, நீங்கள் உங்கள் உடலை நோய் மற்றும் உடல் நலக்கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது. எனவே தேவையான அளவு முட்டைக்கோஸ் எடுத்துக்கொண்டு உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குங்கள்.

புற்றுநோயைத் தடுக்கிறது

முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் ஃபைட்டோகெமிக்கல்கள் உள்ளது. இது உங்களுக்கு புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குளுக்கோசினோலேட்ஸ் என்ற தாவர உட்பொருட்கள் உள்ளன. இந்த சல்ஃபர் கொண்ட வேதிப்பொருட்கள் செரிமானத்தின்போது உடைக்கப்பட்டு, புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது. உங்கள் உடலில் இருந்து புற்றுநோய் செல்களை நீக்குகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.