Benefits of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும்!

Benefits of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 04, 2024 09:57 AM IST

Benefits of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும். என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும்!
Benefits of Butter Milk : உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்தால் போதும்!

செரிமான ஆரோக்கியம்

மோரில் இயற்றை குளுமையூட்டிகள் உள்ளது. மேலும் இயற்கை செரிமான உட்பொருட்கள் உள்ளது. இதில் உள்ள ப்ரோபயோடிக்குகள், உங்கள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இது உங்களுக்கு உணவை உடைத்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச உதவுகிறது. இது செரிமானமின்மையைத் தடுக்கிறது. வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலைப் போக்குகிறது. இது நீங்கள் உணவு உட்கொண்டபின் உங்கள் வயிற்றை மிதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

உடலுக்கு குளிர்ச்சி

இதில் உள்ள உடலுக்கு குளிர்ச்சியூட்டும் தன்மைகள், மோரை ஒரு சிறந்த பானமாக மாற்றுகிறது. இது உங்கள் உடலின் வெப்பநிலையை முறையாக்குகிறது. குறிப்பாக கோடை காலங்களில் உங்கள் உடலுக்குத் தேவையான குளுமையை வழங்குகிறது. இது நீங்கள் உட்கொள்ளும் கார உணவுகளில் இருந்து பெறப்படும் சூட்டை குறைத்து உங்கள் உடலின் உட்புற சமநிலையை பராமரிக்கிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கால்சியம் நிறைந்தது

மோரில் கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள கால்சியம் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை பலமாக்குகிறது. இந்த மோரை நீங்கள் அடிக்கடி உட்கொள்வது உங்கள் அன்றாட கால்சிய தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. இது உங்களின் எலும்பு ஆரோக்கியத்துக்கு அவசியம். வயோதிக்கத்தில் எலும்புப்புரை நோய் ஏற்படாமல் காக்கிறது.

கலோரிகள் குறைவு

மற்ற பால் பொருட்களைப்போல், இதில் கலோரிகள் அதிகம் கிடையாது. மிகக் குறைவான கலோரிகளே இருப்பதால், இது நீங்கள் எடையை குறைக்க விரும்பினாலும் உங்களுக்கு எடையை பராமரிக்க உதவும். இதில் கொழுப்பு குறைவு மற்றும் இதில் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். எவ்வளவு எடுத்தால் கலோரிகளை அதிகரிக்காது என்பது இதன் சிறப்பு.

நோய் எதிர்ப்புத்திறன்

மோரில் உள்ள ப்ரோபயோடிக்குகள் உங்களுக்கு செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க மட்டுமல்ல, இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் மேம்படுத்த உதவும். உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடலின் திறனை உயர்த்தும். இது உங்கள் உடலில் உள்ள தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உங்களை ஆரோக்கியத்துடனும், உங்கள் உடல் நோய்களில் இருந்து விரைவில் மீளும் திறனையும் தரும்.

உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது

மோர் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் இயற்கை பானமாக உள்ளது. இது உங்கள் உடலில் இருந்து கழிவுகளை அடித்து வெளியேற்றுகிறது. உங்கள் செரிமான மண்டலம் மற்றும் கல்லீரலில் சேரும் நச்சுக்களை அகற்றுகிறது. இது உங்கள் உடலில் இருந்து ஆபத்து தரும் நச்சுக்களை நீக்கி, உங்களை புத்துண்ர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

நீர்ச்சத்து

இதில் தண்ணீர் அதிகம் உள்ளதால் மோர், உங்களுக்கு நாள் முழுவதும் நீர்ச்சத்துக்கள் கிடைக்கச் செய்கிறது. மோரை தினமும் பருகுவது உங்கள் உடலில் நீர்ச்சத்தை சரியான அளவு பராமரிக்க உதவுகிறது. மேலும், கட்டாயம் மதிய உணவுடன் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இது உங்கள் உடலில் நீர்ச்சத்துக்களை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக நீங்கள் போதிய அளவு தண்ணீர் பருகமாட்டீர்கள் என்றால் மோர் உங்களுக்கு ஒரு சிறந்த பானம். இது உடல் நீர்ச்சத்து இழப்பதை தடுக்கிறது. எனவே வறண்ட் வெயில் காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்னைகளுக்கு மோர் தீர்வு தருகிறது-

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

மோரில் உள்ள பயோஆக்டில் புரோட்டின்கள் உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. இது நீங்கள் உயர் ரத்த அழுத்தத்தால் அவதியுறும்போது, மோரை தினமும் பருகினால், அது உங்களுக்கு ரத்த அழுத்ததம் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தினமும் மோர் பருகுவதை வழக்கமாகக்கொண்டால் இது உங்களுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகுக்கும்.

எடையிழப்பு

உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தருவதால், கொழுப்பு குறைவு என்பதாலும், மோர் உங்கள் எடையிழப்பு பயணத்தின் உற்ற தோழன் ஆகிறது. நீர்ச்சத்து, கலோரிகள் குறைவு, செரிமான நன்மைகள் என அனைத்தும் உங்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன், உங்களுக்கு தேவையற்ற எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

அசிடிட்டியைத் தடுக்கிறது

நெஞ்செரிச்சல், அசிட்டிட்டியால் அவதிப்படுபவர்கள் என்றால், மேல் உங்களின் வயிற்றுக்கு இதம் தரும் பானம் ஆகும். இது உங்கள் உடலில் அசிடிட்டியைக் குறைக்க உதவுகிறது. இதன் ஆல்கலைன் தன்மைகள் உங்கள் உடலில் அமில அளவை அதிகரித்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்களுக்கு அசிடிட்டியில் இருந்து நிவாரணம் தருகிறது. இது உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.