Benefits of Boiling : கண் ஆரோக்கியம் முதல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுவது வரை, வேகவைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Boiling : கண் ஆரோக்கியம் முதல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுவது வரை, வேகவைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Benefits of Boiling : கண் ஆரோக்கியம் முதல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுவது வரை, வேகவைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Updated Jun 14, 2024 09:42 AM IST

Benefits of Boiling : கண் ஆரோக்கியம் முதல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுவது வரை, வேகவைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Boiling : கண் ஆரோக்கியம் முதல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுவது வரை, வேகவைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Benefits of Boiling : கண் ஆரோக்கியம் முதல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுவது வரை, வேகவைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

உணவுகளை வேகவைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

ஐசிஎம்ஆரின் கருத்துக்களின்படி, உணவை வேகவைத்து சாப்பிடுவது, உணவின் ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும் வழிகளுள் ஒன்றாகும். சில உணவுகள் வேகவைக்கும்போது அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகிறது. இது உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் மற்ற உட்பொருட்கள் வேகவைக்கும்போது அதிகரிக்கின்றன. வேகவைத்தால் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும் உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

உணவை சரியாக எப்படி வேகவைப்பது?

உணவை வேகவைக்க சரியான அளவு அதாவது அதை மூடும் அளவுக்கு மட்டும் தண்ணீரை ஊற்றி வேகவைகக்வேண்டும். அப்போதுதான் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாது. குறைவான நேரம் மட்டுமே உணவை வேகவைக்கவேண்டும. இவற்றை வேக வைக்கும் தண்ணீரையும் மற்ற உணவுகளில் சேர்த்துவிடவேண்டும்.

உருளைக்கிழங்கு

நிபுணர்களின் அறிவுரைப்படி, உருளைக்கிழங்கை அதன் தோலுடன் வேகவைப்பது, தண்ணீர் கரையக்கூடிய, வைட்டமின், சி மற்றும் பி ஆகியவற்றை தக்கவைக்க உதவுகிறது. வேகவைத்த உருளைக்கிழங்கில் கலோரிகள், கொழுப்பு ஆகியவை வறுத்தவற்றைவிட குறைவு.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைப்பது, அதில் உள்ள பீட்டாகரோட்டின்களை காக்க உதவுகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் வைட்டமி ஏ ஆக உடலில் மாறுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி பீட்டா கரோட்டின்கள் கண் பார்வை, நோய் எதிர்ப்ப மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது.

முட்டை

முட்டையை வேகவைக்கும்போது அதில் உள்ள புரதச்சத்துக்களை எளிதில் செரிக்கவைக்க முடிந்ததாக மாற்றுகிறது மற்றும் அவற்றை பச்சையாக சாப்பிடுவதைவிட உடலுக்கு நன்மைகளைக் வேகவைத்து சாப்பிடும்போது கொடுக்கிறது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியை வேகவைக்கும்போது, அது நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட்களை தக்கவைக்க உதவுகிறது.

கேரட்

கேரட்களை வேகவைக்கும்போது, அதன் தோலை உடைத்து, பீட்டாகரோட்டின்களை உடல் அதிகம் உறிஞ்ச உதவுகிறது. பீட்டா கரோட்டின் மேலும் வைட்டமின் ஏ ஆகி, கண் பார்வையை கூராக்குகிறது மற்றும் உடலில் எதிர்ப்பாற்றரைல அதிகரிக்கிறது.

கீரைகளை

கீரைகளை வேகவைக்கும்போது, அதில் உள்ள ஆக்சலேட்களை அது குறைக்கிறது. இரும்பு மற்றும் கால்சியச் சத்துக்களை அது உடலுக்கு தருகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்டை வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இது பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டாலைன்ஸ் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை பாதுகாக்க உதவுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வீக்கத்தை குறைத்து, இதயத்துக்கு நன்மை கொடுக்கிறது.

பருப்புகள்

பருப்புகள், கார்போஹைட்ரேட்களை உடைத்து, ஊட்டச்சத்துக்களுக்கு எதிரான லெக்டின் மற்றும் ஃபைட்டேட்ஸ் போன்ற குணங்களை குறைக்கிறது. பருப்புகளை வேகவைப்பது புரதச்சத்துக்களை செரிக்கவைக்கவும், மினரல்களை உறிஞ்சவும் உதவுகிறது.

தக்காளி

தக்காளியை வேகவைக்கும்போது, அதில் உள்ள லைக்கோபெனை வெளியிடும் அளவு அதிகரிக்கிறது. இது சில புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். ‘

பார்லி

பார்லியை வேகவைக்கும்போது, ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச உதவுகிறது. நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மினரல்களை உடல் உறிஞ்ச உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.