Benefits of Boiled Egg : சே நோ டூ ஆம்லேட், ஆஃப்பாயில்; வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவதால் என்ன பலன்கள்?
Benefits of Boiled Egg : சே நோ டூ ஆம்லேட் ஆஃப்பாயில்; வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவதால் என்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் 2 வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். முட்டை புரதச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். ஊட்டச்சத்துக்களின் உறைவிடம் என்றும் கூறலாம். முட்டையில் இருந்து கிடைக்கும் புரதம் உயர் தர புரதம் ஆகும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. நீங்கள் தினமும் 2 வேகவைத்த முட்டைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். எனவே தினமும் உங்கள் உணவில் இரண்டு முட்டைகள் எடுப்பதை உறுதிப்படுத்தி உங்கள் ஆரோக்கியம் மேம்பட வழிவகுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
புரதம் (ஒரு முட்டையில் 6 கிராம் உள்ளது)
வளர்ந்த ஒரு நபருக்கு அவர்களின் ஒரு கிலோ எடைக்கும் 0.8 கிராம் புரதச்சத்துக்கள் தேவைப்படுகிறது. ஒரு முட்டை உங்களுக்கு 6 கிராம் புரதத்தை தரும் என்றால், அதுவே உங்களின் மொத்த புரத தேவையின் அளவைக் கொடுத்துவிடும். வேறு பருப்பு வகைகளையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டீர்கள் என்றால் அது உங்களுக்கு புரத தேவையின் அளவை பூர்த்தி செய்யும். இறைச்சியிலும் புரதம் உள்ளது. இவற்றையெல்லாம் நீங்கள் கலந்து எடுத்துக்கொள்ளும்போது அது உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தைக் கொடுக்கிறது.
வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ என்பது கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையான ஒன்று, உங்கள் சருமத்துக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கும் உதவக்கூடியது. இது உங்கள் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. செல்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பிரிவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் ஏ இரண்டு வேக வைத்த முட்டையில் கிடைக்கிறது.
வைட்டமின் டி
வைட்டமின் டி உங்கள் உடலில் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. உங்கள் எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டல இயக்க அதிகரிக்க உதவுகிறது. உடலில் எலும்பு கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது. மேலும் ரிக்கெட்ஸ் மற்றும் எலும்புப்புரை ஆகிய நோய்களைப் போக்குகிறது. ஒருவருக்கு தேவையான வைட்டமின் டியைக் கொடுக்கிறது.
வைட்டமின் பி12 (2 வேகவைத்த முட்டையில் 1.6 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது)
வைட்டமின் பி12 உங்கள் ரத்த சிவப்பணுக்கள் உருவாக மிகவும் தேவை. இது உங்கள் நரம்பு மண்டலத்தின் இயக்கம் மற்றும் டிஎன்ஏவுக்கும் உதவுகிறது. இது உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. உங்கள் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஒரு வளர்ந்த நபருக்கு தினமும் 2 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இந்த முட்டையை தினமும் 2 நீங்கள் உட்கொண்டால் அது உங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் பி12ஐத் தருகிறது.
முட்டையில் 0.6 கிராம் வைட்டமின் பி2 உள்ளது
வைட்டமின் பி2 கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்சிதைக்கு உதவுகிறது. இந்த வைட்டமின்கள் சருமம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. முட்டை உங்களுக்கு தினமும் தேவைப்படும் அளவு பி2வைக் கொடுக்கிறது. வளர்ந்த ஒரு நபருக்கு 1.3 மில்லி கிராம் வைட்டமின் பி2 தேவைப்படுகிறது.
24 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது
ஒரு முட்டையில் 24 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. ஃபோலேட்கள் டிஎன்ஏவுக்கு மிகவும் தேவை. இது ரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், ஒட்டுமொத்த செல்களின் ஆரோக்கியத்துக்கும், கர்ப்ப காலத்தில் மிகவும் முக்கியமானது. ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலேட்கள் தேவைப்படுகிறது. ஃபோலேட்களின் அன்றாட தேவை என்பது முட்டையில் கிடைத்துவிடும். எனவே நீங்கள் உங்கள் உணவில் மற்ற புரதத்தை எடுத்துக்கொண்டு, உங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
2 முட்டையில் 28 மைக்ரோகிராம் செலினியச்சத்துக்கள் உள்ளது
செலினியம் உங்கள் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது உங்கள் உடலில் செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. செலினியம் தைராய்ட் இயக்கத்துக்கும் உதவுகிறது. உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது. முட்டையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு செலினியம் கிடைக்கச் செய்யும் எளிய வழிகளுள் ஒன்றாகும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 மைக்ரோகிராம் செலினியம் தேவைப்படுகிறது.
கோலைன்கள் நிறைந்தது
2 முட்டையில் 294 மில்லிகிராம் கோலைன்கள் உள்ளது. இது அரை நாளுக்கு ஒரு வளர்ந்த நபருக்கு தேவையான கோலைன்களை வழங்கிவிடுகிறது. இந்த ஊட்டச்சத்து மூளை, கல்லீரல் இயக்கம், செல் மெம்ரைன்கள் ஒன்றிணை உதவுகிறது. இது உங்கள் மூளை இயக்கம் மற்றும் நினைவாற்றல் இயக்கத்துக்கு உதவுகிறது.
இரும்புச்சத்துக்கள்
2 வேகவைத்த முட்டைகளில் 1.2 மில்லி கிராம்கள் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. இது உடலில் ஆக்ஸிஜனை கடத்தவும் செய்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கச் செய்கிறது.
சிங்க் சத்துக்கள்
2 முட்டையில் 1.1 மில்லிகிராம் சிங்க் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் அன்றாட தேவையான சிங்க் சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்கிவிடுகிறது. ஒருவருக்கு 11 மில்லிகிராம் சிங்க் சத்துக்கள் தினமும் தேவைப்படுகிறது. சிங்க் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. செல்களை சரிசெய்கிறது. காயங்களை ஆற்றுகிறது. டிஎன்ஏ உற்பத்திக்கு மிகவும் முக்கியமாக உள்ளது. இது புரத உற்பத்தி மற்றும் சுவை மற்றும் நறுமணத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்