ப்ளூபெரியின் நன்மைகள் : தினமும் ஒரு கைப்பிடியளவு ப்ளூபெரிகளை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ப்ளூபெரியின் நன்மைகள் : தினமும் ஒரு கைப்பிடியளவு ப்ளூபெரிகளை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

ப்ளூபெரியின் நன்மைகள் : தினமும் ஒரு கைப்பிடியளவு ப்ளூபெரிகளை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Published May 06, 2025 07:00 AM IST

தினமும் ஒரு கைப்பிடியளவு ப்ளூபெரிகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்குக் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பாருங்கள்.

ப்ளூபெரியின் நன்மைகள் : தினமும் ஒரு கைப்பிடியளவு ப்ளூபெரிகளை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
ப்ளூபெரியின் நன்மைகள் : தினமும் ஒரு கைப்பிடியளவு ப்ளூபெரிகளை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ப்ளூபெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ப்ளூபெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. ஆந்தோசியானின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. செல்களை சேதமடைவதில் இருந்து காக்கிறது. நாள்பட்ட வியாதிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது

ப்ளூபெரிகள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மேலும் மூளையின் இயக்கம் மற்றும் வயோதிகம் தொடர்பாக மூளையில் ஏற்படும் ஆபத்துக்களைப் போக்குகிறது. இது ஒட்டுமொத்த மனத்தெளிவையும் ஏற்படுத்துகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ப்ளூபெரிகளில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. அது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது.

சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது

ப்ளூபெரிகளில் அதிகளவில் வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்கள் உள்ளது. இது உடலில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் சேதத்த்தில் இருந்து பாதுகாக்கிறது. சருமத்தின் தன்மை மற்றும் டெக்ஸ்சரை மேம்படுத்துகிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது

இந்த பெரிகளில் அதிகளவில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உடலில் இருந்து வீக்கத்தைக் குறைக்கும். இது வீக்கம் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்

ப்ளூபெரிகள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் உடல் தொற்றுக்கள் மற்றும் நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது

உயர் நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த கிளைசமிக் உணவாக உள்ளதால், இந்த ப்ளூபெரிகள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாகும். இது ரத்தச் சர்க்கரையுடன் போராடுபவர்களுக்கும் மிகுந்த நன்மைகளைக் கொடுக்கிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

ப்ளூபெரிகளில் கலோரிகள் குறைவு, ஆனால், நார்ச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் சத்துக்கள் அதிகம். அது உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. மேலும் உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான கண் பார்வையை மேம்படுத்துகிறது

ப்ளுபெரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ உள்ளிட்டவை கண்புரை நோய் உள்ளிட்ட வயோதிகம் தொட்ர்பாக கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைப் போக்குகிறது. இது நல்ல கண் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.