Benefits of Black Cumin Oil : சொரியாசிஸ் முதல் சருமநோய்கள் அத்தனைக்கும் தீர்வு! இந்த எண்ணெயில் இத்தனை நன்மையா?
Benefits of Black Cumin Oil : கருஞ்சீரகத்தில் இருந்து பிழிந்து எடுக்கப்படுகிறது. தலைவலி, முதுகு வலி, தொற்று, வீக்கம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
கருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. இது சருமம், தலைமுடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கருஞ்சீரகத்தில் இருந்து பிழிந்து எடுக்கப்படுகிறது. தலைவலி, முதுகு வலி, தொற்று, வீக்கம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
முகப்பருக்களை குறைக்கிறது
முகப்பருக்கள் போன்ற சரும பிரச்னைகளை கருஞ்சீரக எண்ணெய் போக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சிக்கு எதிரான பண்புகள் உதவுகின்றன. கருஞ்சீரகத்தின் சாறில் இருந்து பெறப்படும் ஜெலை 60 நாட்கள், இருவேளை முகத்தில் தடவினால், அது முகப்பருக்களை குணப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சொரியாசிஸ் நோய்க்கு சிகிச்சையளிக்கிறது
சொரியாசிஸ் நோயால் ஏற்படும் வீக்கம் மற்றும் மற்ற அறிகுறிகளை கருஞ்சீரக எண்ணெய் போக்குகிறது. அதை ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்தால் அதன் பலன்கள் தெளிவாக தெரியவரும்.
காயங்களை ஆற்றுகிறது
கருஞ்சீரக எண்ணெயில் தைமோகுயினன் என்ற உட்பொருள் உள்ளது. இது திசுக்களின் வளர்ச்சியை தூண்டி, காயங்களை எளிதில் குணப்படுத்துகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், வெட்டுகாயங்கள் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. அதற்கு இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சிக்கு எதிரான குணங்கள் காரணமாகிறது என்று விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிமைக்ரோபயல் தன்மைகளால், இந்த எண்ணெய், தலைமுடி ஆரோக்கிய பொருட்களில் சேர்க்கப்படுகிறது. தலைக்கு தடவும் மாஸ்குகள் மற்றும் ஷாம்பூக்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தலைமுடிக்கு பளபளப்பையும், வலுவையும், அடர்த்தியையும் கொடுக்கிறது.
விட்டிலிகோவுக்கு சிகிச்சை அளிக்கிறது
விட்டிலிகோவுக்கு சிகிச்சையளிக்கிறது, விட்டிலிகோ என்பது சருமத்தில் ஏற்படும் நிறமி மாற்றம். சருமத்திற்கு தேவையான மெலனினை பரவச்செய்யும் திறன் கொண்டதாக கருஞ்சீரக எண்ணெய் உள்ளது. மெலனின் என்பது சருமம், கண் மற்றும் தலைமுடியில் உள்ள ஒரு நிறமி.
வீக்கத்தை குறைக்கிறது
வீக்கத்தை குறைக்கும் தன்மை கருஞ்சீரக எண்ணெய்க்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீக்கத்தால் நாள்பட்ட வியாதிகளான இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படலாம். அதை குறைப்பதால் இந்த நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
உடலில் கொழுப்பை குறைத்து, உடல் எடை இழக்க உதவுகிறது. இதை உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது, உடலில் சேரும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரத்தச்சர்க்கரை கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது
ரத்தச்சர்க்கரை அளவை நிலைப்படுத்த கருஞ்சீரக எண்ணெய் உதவுகிறது. இன்சுலின் அளவு மற்றும் ரத்த சர்க்கரை அளவை சாப்பிடுவதற்கு முன்னரும், பின்னரும் கட்டுப்படுத்துகிறது.
எக்சீமாவின் அறிகுறிகளை குறைக்கிறது
கருஞ்சீரக எண்ணெய் எக்சீமாவின் அறிகுறிகளை குறைக்கிறது. எக்சீமா என்பது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பு நோய் ஆகும். இந்த எண்ணெயை வறண்ட சருமத்தில் 4 வாரங்கள் தடவினாலே போதும். நல்ல பலன் கிட்டும். எலிகளில் இது சரும பிரச்னையை சரிசெய்து வீக்கத்தை குறைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வளர்சிதை மாற்ற சிண்ட்ரோமை குறைக்கிறது
கருஞ்சீரக எண்ணெய், வளர்சிமை மாற்ற சிண்ரோமை குறைக்கிறது. இந்த பிரச்னை ஏற்பட்டால், அது இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவற்றை அதிகரிக்கிறது. ஆய்வில் இது ரத்த அழுத்தத்தை குறைப்பது, ரத்தச்சர்க்கரையை குறைப்பது, கெட்ட கொழுப்பை குறைப்பது தெரியவந்தது. ஆரோக்கிய வாழ்க்கைக்கு இது உதவக்கூடும். ஆனால் இதனுடன் ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்.
இதை குறைவான அளவுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது. இதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த எண்ணெயை எடுத்துக்கொள்ளக்கூடாது. வெளிப்புற பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்