Benefits of Black Cumin : மரணம் கூட மிரண்டு ஓடும்! தினம் உணவில் இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Black Cumin : மரணம் கூட மிரண்டு ஓடும்! தினம் உணவில் இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்!

Benefits of Black Cumin : மரணம் கூட மிரண்டு ஓடும்! தினம் உணவில் இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 12, 2024 01:42 PM IST

Benefits of Black Cumin : உடலுக்கு இத்தனை நன்மைகளை கொடுக்கும் என்பதால் கருஞ்சீரகம் மரணத்தை கூட மிரண்டு ஓட வைக்கும் என்று கூறப்படுகிறது.

Benefits of Black Cumin : மரணம் கூட மிரண்டு ஓடும்! தினம் உணவில் இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்!
Benefits of Black Cumin : மரணம் கூட மிரண்டு ஓடும்! தினம் உணவில் இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும்!

ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என்ற உட்பொருட்கள், நச்சுக்களான ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்கி, செல்களில் சேதம் ஏற்படுவதை தடுக்கிறது.

கருஞ்சீரகத்தில் தைமோகுனன், கார்வக்ரால், டி அந்தோலே மற்றும் 4-டெர்பினோயல் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு கொடுக்கிறது. அதில் சர்க்கரை, புற்றுநோய், இதய நோய், உடல் பருமன் ஆகியவையும் அடங்கும்.

பாக்டீரியாக்கள் மற்றும் அழற்சிக்கு எதிராக போராடுகிறது

கருஞ்சீரகம், பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. சில பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது மற்றும் மெத்திசிலின் எதிர்ப்பு கொண்டது என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

கருஞ்சீரக எண்ணெயில், ஃபைட்டோகெமிக்கல்கள் மற்றும் ஃபைட்டோஸ்டீரோல்கள் உள்ளது. அது பசியை கட்டுபடுத்தி கொழுப்பை அதிகம் கரைக்கிறது. இதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது

கருஞ்சீரகத்துடன், புதினா சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது நினைவாற்றல் பெருகுவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. இது வயோதிகர்களுக்கு ஏற்படும் அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோயை தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவுகிறது.

கொழுப்பை குறைக்க உதவுகிறது

எல்டிஎல், லோடென்சிட்டி லிப்போபுரோட்டீன் எனப்படும் கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதை குறைக்கும் திறன் கருஞ்சீரகத்துக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இதய நோய் ஆபத்தை குறைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்தும்

உயர் ரத்த சர்க்கரை, கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். நரம்பு சேதம், பார்வை மாற்றம், சிறுநீரக பிரச்னைகள் மற்றும் காயங்களை ஆற்றும் திறன் குறைவு என பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

கருஞ்சீரகம், சர்க்கரை நோயை இயற்கையாக சரிசெய்து, உடலில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்துக்கும், டைப் 2 சர்க்கரை நோய்க்கும் தீர்வு கொடுக்கிறது. இதை மூன்று மாதம் தொடர்ந்து எடுத்தால் சர்க்கரை அளவு குறைவதை உணர முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது

கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினன், வாயு தொடர்பான பல்வேறு பிரச்னைகளை சரிசெய்யக்கூடிய ஒன்றாகும். எனவே கருஞ்சீரகத்தை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதால், அது மலச்சிக்கலை போக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கருஞ்சீரகம் அல்சரை தடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய்க்கு எதிரான நற்குணங்கள் நிறைந்தது

கருஞ்சீரகத்தில் புற்றுநோய் எதிரான குணங்கள் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதில் உள்ள தைமோகுயினன் அதற்கு உதவுகிறது. இது கணையம், நுரையீரல், கருப்பை, ப்ராஸ்டேட், சருமம் மற்றும் குடல் புற்றுநோய்களுக்கு எதிராக போராடுகிறது.

வீக்கத்தை குறைக்கிறது

தொற்றுகள் மற்றம் காயங்களில் இருந்து உடலை காப்பாற்ற உடல் தரும் நோய் எதிர்ப்பு பதில்தான் வீக்கம். ஆனால் நீண்ட நாள் வீக்கம் புற்றுநோய், சர்க்கரை மற்றும் இதய நோய்களை ஏற்படும் அபாயம் கொண்டது. கருஞ்சீரகத்தில் அழற்சி மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது உடலில் ஏற்படும் தேவையற்ற வீக்கத்தை குறைக்கிறது.

சரும நோய்களை குணப்படுத்துகிறது

கருஞ்சீரகம் பளபளக்கும் தெளிவான சருமத்தை கொடுக்கிறது. பல்வேறு சரும பிரச்னைகளை எதிர்த்து போராடுகிறது. முகப்பருக்கள், தழும்புகள், வறண்ட சருமம்ம, சருமம் வெள்ளையாவது, சுருக்கம், நிறமாற்றம் ஆகிய பிரச்னைகளை சரிசெய்கிறது.

பல் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது

பற்களில், ஈறு வீக்கம், சொத்தைப்பல், ரத்தம் வடிதல் போன்ற பல்வேற பிரச்னைகள் ஏற்படலாம். அத்தனை பல் வலிக்கும், பிரச்னைகளுக்கும் கருஞ்சீரகம் ஒரு இயற்கை மருத்துவம் ஆகும்.

உடலுக்கு இத்தனை நன்மைகளை கொடுக்கும் என்பதால் கருஞ்சீரகம் மரணத்தை கூட மிரண்டு ஓட வைக்கும் என்று கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குக ள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.