Benefits of Bitter Gourd : பார்த்தாலே நாக்கு முதல் தொண்டை வரை கசக்கும்! பாகற்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா
Benefits of Bitter Gourd : பார்த்தாலே நாக்கு முதல் தொண்டை வரை கசக்கும், பாகற்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பாகற்காய் கடும் கசப்பு சுவை நிறைந்தது. இதில் எண்ணற்ற வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து. எனவே பாகற்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பாகற்காயை கழுவி சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். தேவையில்லையென்றால், அதன் விதைகளையும் நீக்கிவிடலாம்.
இதன் கசப்புத்தன்மையை குறைக்க இதில் உப்பு தூவி அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் கழுவினால், அதன் கசப்புத்தன்மை குறைந்துவிடும். இதில் மசாலா, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வறுத்து சாப்பிடவேண்டும். இதில் மசாலக்கள் சேர்த்து சாப்பிடலாம். இதில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
பாகற்காயில் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ப்ளாவனாய்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பாற்றல், உடலின் திறனை மேம்படுத்துகிறது. தொற்றுக்கள் மற்றும் நோய்களை, குறிப்பாக மழைக்காலத்தில் தடுக்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, காற்றில் கிருமிகள் வளரும், அதனால் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கிறது.
உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது
பாகற்க்காயில் உள்ள குயினைன்கள் மற்றும் சாப்போனின்கள், உடலில் உள்ள கழிவுகளை நீக்குகின்றன. இது ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மற்றும் சரும பிரச்னைகளை தீர்க்கிறது. முகப்பருக்கள் மற்றும் சருமத்தில் ரேஷ்கள் வராமல் தடுக்கிறது. மழைக்காலத்தில் குளிர் அதிகரித்துவிட்டால், சருமப் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
பாகற்காயில் உள்ள சரான்டின் மற்றும் பாலிபெப்டைட் போன்ற உட்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இதனால் இது மழைக்காலத்திற்கு மிகவும் ஏற்றது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை முறைப்படுத்த பாகற்காயை உட்கொள்ளலாம்.
செரிமானத்தை அதிகரிக்கிறது
பாகற்காயில் நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் இது ஆரோக்கியமான செரிமானத்துக்கு வழிவகுக்கிறது. பொதுவான செரிமான பிரச்னைகளான உப்புசம், செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.
மழைக்காலத்தில் எண்ணெய் உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, அது செரிமானத்தை பாதிக்கிறது. பாகற்காய் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை முறைப்படுத்துகிறது.
வீக்கத்தை குறைக்கிறது
பாகற்காயில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், பாகற்காய் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் ஏற்படும் மூட்டுவலி, கை-கால் வலி, ஆர்த்ரிட்டிஸ் பிரச்னைகள் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. பொதுவான பருவகால அசவுகர்யங்களைக் குறைக்கிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பாகற்காயில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் மற்றும் ஆன்டிஆகஸிடன்ட்கள் மாசு மருக்கள் அற்ற தூள, தெளிவான, ஆரோக்கியமாக சருமத்தை பராமரிக்க உதவுகின்றன.
சரும தொற்றுகள் மற்றும் முகப்பருக்களில் இருந்து இந்த மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாக்கிறது. பாகற்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால், உங்கள் சருமத்துக்கு ஆரோக்கியமும், பளபளப்பும் கிடைக்கிறது.
உடல் எடை லோண்மைக்கு உதவுகிறது
பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது, இதன் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. இதனால் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கிறது.
இது ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடையை எளிதாக பாகற்காயை எடுத்துக்கொண்டு குறைக்க முடியம்.
கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பாகற்காய் கல்லீரலில் சேரும் கழிவுகளை நீக்கி, கல்லீர்ல் ஆரோக்கியத்துக்கு உறுதுணை புரிகிறது. கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்கும் திறன், உடலில் உள்ள நச்சுக்களைப் போக்குகிறது.
இது மழைக்காலத்திற்கு மிகவும் அவசியம். ஏனெனில் மழைக்காலத்தில் செரிமான மண்டலம் கொஞ்சம் மந்தமாவிடும். நாம் சாப்பிடும் உணவுகளால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படும். ஈரப்பதத்தாலும் அது பாதிக்கப்படும் என்பதால், மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுகளுள் ஒன்று பாகற்காய்
தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் சிங்க் போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது உங்கள் தலைமுடி உதிர்வதை குறைத்து, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. இது உங்களுக்கு மழைக்காலத்திற்கு நல்லது. மழைக்காலத்தில் அதிகரிக்கும் குளிரால் உங்கள் தலை மற்றும் தலைமுடிக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டாபிக்ஸ்