தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Bitter Gourd : பேரை கேட்டாலே கசக்கும்! ஆனால் நற்குணங்களை தெரிந்துகொண்டால் இனிக்கும்! அது எந்த காய்?

Benefits of Bitter Gourd : பேரை கேட்டாலே கசக்கும்! ஆனால் நற்குணங்களை தெரிந்துகொண்டால் இனிக்கும்! அது எந்த காய்?

Priyadarshini R HT Tamil
May 13, 2024 10:17 AM IST

Benefits of Bitter Gourd : பேரை கேட்டாலே கசக்கும்! ஆனால் நற்குணங்களை தெரிந்துகொண்டால் இனிக்கும்! அது எந்த காய் என்று தெரியவேண்டுமா? தெடர்ந்து படிங்க.

Benefits of Bitter Gourd : பேரை கேட்டாலே கசக்கும்! ஆனால் நற்குணங்களை தெரிந்துகொண்டால் இனிக்கும்! அது எந்த காய்?
Benefits of Bitter Gourd : பேரை கேட்டாலே கசக்கும்! ஆனால் நற்குணங்களை தெரிந்துகொண்டால் இனிக்கும்! அது எந்த காய்?

ட்ரெண்டிங் செய்திகள்

சர்க்கரையை கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை என்றாலே இனிக்கும். சர்க்கரை நோய் வந்துவிடும் என்று நாம் இனிப்பு சுவையே சேர்க்க முடியாமல் இருக்க முடியுமா? அதற்கு வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து, இயற்கை முறையில் உருவாகும் கரும்பு சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை என பயன்படுத்தவேண்டும்.

அப்படியே உங்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், நீங்கள் அதை பாகற்காயை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை என்றால் இனிப்பு, பாகற்காய் என்றால் கசப்பு. எனவே சர்க்கரை நோய்க்கு சரியான தேவையாக பாகற்காய் உள்ளது.

பாகற்காயில் சார்ன்டின் மற்றும் ஆல்கலாய்ட்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. இதுதான் சர்க்கரை முறைப்படுத்த உதவும் முக்கிய உட்பொருளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது. வளர்சிதையையும் முறைப்படுத்துகிறது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மற்றும் ஹைப்போகிளைசமிக் உட்பொருட்கள் பாகற்காயை நீரிழிவு நோய்க்கு சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

ரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது

இதில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான வலுவான குணங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஈசிமா, சொரியாசிஸ் போன்ற சரும நோய்களை குணப்படுத்தவும் பாகற்க்காய் பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

பாகற்காய், ஆன்டி ஆன்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உடலில் பல்வேறு தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து உடலைக் காக்கிறது. குறிப்பாக வளர்சிதையின்போது வெளியாகும் ஆபத்தான உட்பொருட்களிடம் இருந்தும் உடலைக்காக்கிறது. அவற்றை உடலுக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பதற்கு முன்னரே தடுக்கிறது.

எனவே பாகற்காயை உணவில் சேர்ப்பது, பல்வேறு நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதய நோய்கள், சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் கல்லீரல் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

சுவாச மண்டலத்தை சீர்செய்கிறது

ஆஸ்துமா, பிரான்சிட்டிஸ், ரினிட்டிஸ் போன்ற பல்வேறு சுவாச கோளாறுகளுக்கு பாகற்காய் நிவாரணம் அளிக்கிறது என பல்வேறு ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், அலர்ஜி ஏற்படும்போது உடலில் சுரக்கும் திரவத்துக்கு எதிரான குணங்கள், அடக்கும் திறன், சளியை நீக்கும் திறன் மற்றும் வைரஸ்க்கு எதிரான குணங்கள் சுவாச ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் ஒன்றாகும்.

சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

பாகற்காயை வழக்கமாக உட்கொள்வது, சருமத்தில் பளபளப்பை ஏற்படுத்துகிறது. முகத்தில் உள்ள மாசு, மருக்களை நீக்குகிறது. பாகற்காயின் ரத்தத்தை சுத்திகரிக்கும் குணங்கள், முகப்பருக்களை தடுப்பதுன் சரும தொற்றுகளை குணப்படுத்துகிறது.

மூல நோயை குணப்படுத்துகிறது

பாகற்காயில் உள்ள வலுவான வீக்கத்துக்க எதிரான குணங்கள் பாகற்காயை மூல நோய் ஏற்படுத்தும் வலிக்கு நிவாரணியாக செயல்படுத்துகிறது. பாகற்காய் செடியின் வேரில் இருந்த தயாரிக்கப்படும் ஒரு பேஸ்டை வெளிப்புறத்தில் இருந்து தடவினால், அது மூலநோய் ஏற்படுத்தும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. 

வலியையும், ரத்தப்போக்கையும் குறைக்கிறது. பாகற்காய் சாறு மூலநோய்க்கு உடனடி நிவாரணத்தைக் கொடுக்கிறது.

பாகற்காயில் உள்ள சத்துக்கள்

பாகற்காயில், 21 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட் 4 கிராம், நார்ச்சத்துக்கள் 2 கிராம், தினசரி தேவையில் வைட்டமின் சி 99 சதவீதமும், வைட்டமின் ஏ 44 சதவீதமும், ஃபோலேட் 17 சதவீதமும், பொட்டாசியம் 8 சதவீதமும், சிங்க் 5 சதவீதமும், இரும்புச்சத்து 4 சதவீதமும் உள்ளது. எனவே இதை கட்டாயம் வாரத்தில் ஒருமுறையாவது சேர்ப்பது உடலுக்கு நன்மை தரும்.

பாகற்காயின் கூடுதல் நன்மைகள்

பாகற்காயில் உள்ள காலிக் அமிலம், கேட்சின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் ஆகியவை உடலின் செல்களை காக்கின்றன.

பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ, சி, சிங்க் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நோய்களை தடுப்பதுடன், எலும்பு வளரவும், நாள்பட்ட காயங்களை ஆற்றவும், கண் பார்வையை சரிசெய்யவும் உதவுகிறது.

பாகற்காயின் நச்சுநீக்கும் திறன்கள், கல்லீரலுக்கு நன்மை தருகிறது. உடலில் உள்ள குடல் உள்ளுறுப்புக்களை சுத்தம் செய்கிறது. இதனால் ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் பெரியளவில் நன்மையடைகிறது.

அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதை உறுதி செய்து, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்களை அடித்து வெளியேற்றுகிறது. இது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை குறைக்கிறது.

90 சதவீதம் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய் என்பதால், உடலை நீர்ச்சத்துடன் வைக்கிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும், குளிர்ச்சியடையச் செய்து, நச்சுக்களைப் போக்கி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த பாகற்காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்