Benefits of Beetroot Juice : தினமும் ஒரு டம்ளர்; 10 நாள் தொடர்ந்து பருகவேண்டிய சாறு! ரத்த சோகையை விரட்டியடிக்கும்!
Benefits of Beetroot Juice : இந்த பானத்தை 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகையை விரட்டியடிக்கும். முடி உதிர்வு, சருமம் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும்.

வயோதிகத்தால் ஏற்படும் பார்வை குறைபாடு மற்றும் ஞாபக மறதி ஆகியவற்றைப்போக்கும். சருமம் பொலிவு பெறும். செரிமானக் கோளாறுகள், அல்சர் மற்றும் வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வாகும். உடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1
(தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். பீட்ரூட்டில் செலினியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், சோடியம், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. பீட்ரூடை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது சருமத்துக்கு பொலிவைத்தரும். வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்கும். குடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும்)
இஞ்சி – சிறிய துண்டு
(பச்சை வாசத்தை போக்கி, சுவையைத்தரும்)
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
(இனிப்புக்கு வெல்லம் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம். பீட்ரூட்டே இனிப்பு சுவையானதுதான். எனவே இது தேவையில்லை. ஆனால் அதன் பச்சை சுவை விரும்பாதவர்கள் இதை சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும். இதை அப்படியே பருகவேண்டும். தேவைப்பட்டால் ஜஸ் க்யூப்கள் சேர்த்து பருகலாம். எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
சாறு வடித்தபின் மிஞ்சும் சக்கையை உங்கள் முகம் உடலில் சருமத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துகொள்வதால் சருமம் பொலிவு பெறுகிறது. அதை ஜஸ் ட்ரேயில் சேர்த்து ஐஸ் கட்டிகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதையும் வைத்து மசாஜ் செய்யலாம்.
பீட்ரூட் சாறில் உள்ள நன்மைகள்
பீட்ரூட் சாறில் குறைவான கலோரிகள் உள்ளது.
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால், உடல் எடையை குறைக்காது. உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவும்.
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் புதிய ரத்தம் ஊறுத்துவங்கும். ரத்தசோகை நோயை குணமாக்கும்.
கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். புற்றுநோய் செல்களை தடுக்கும். அல்சர் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை இந்த சாறை பருகலாம்.
செரிமானக் கோளாறு நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களும் இந்தச்சாறை பருகலாம். முதுமையை தள்ளிப்போட உதவும்.
மூளையில் ரத்தஓட்டம் சீராகும். இதனால் மறதிநோய் குணமாகும். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் சீராகும்.
உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவும். உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு காரணம் உடலில் தேங்கும் நச்சுக்கள்தான், அதை அடித்து வெளியேற்றும்.
சருமத்தை பளபளப்பாக்கும். தொடர்ந்து பருகும்போது, சருமம் பொலிவு பெறும். வாரத்தில் இரண்டு முறை மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்பிணிகள் வாரத்தில் இரண்டு முறை பருக, குழந்தைகளின் முளை வளர்ச்சிக்கு உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்