Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?-benefits of beetroot brain and gut health what are the benefits of beetroot as a post monophase benefit - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
May 04, 2024 01:24 PM IST

Benefits of Beetroot : பீட்ரூட்டில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?
Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது

பீட்ரூடின் நிறத்துக்கு பீட்டாசியானின்கள் காரணமாக உள்ளது. இவைதான் பீட்ரூட்க்கு இந்த நிறத்தைக் கொடுக்கின்றன. இது குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக சிறுநீர்ப்பை புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது. பீட்ரூட்டில் மற்ற புற்றுநோயை எதிர்க்கும் உட்பொருட்கள் உள்ளன. அவை ஃபெரிக் ஆசிட்கள், ருயின் மற்றும் கெம்ப்ஃபெரால் ஆகியவை ஆகும்.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது

பீட்ரூட்டில் உள்ள பீட்டாலைன்கள், பீட்ரூட்க்கு அதன் வண்ணத்தை இயற்கையாக வழங்கும் உட்பொருள், வீக்கத்தை குறைக்கிறது. இது மூட்டுகள் மற்றும் முழங்கால் வீக்கத்தை குறைக்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள் எனப்படும் இயற்கை உட்பொருட்கள், இது பீட்ரூடை இதயத்துக்கு இதமானதாக்குகிறது. இதில் உள்ள நைட்ரேட்கள், ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. ரத்த நாளங்களை அமைதிப்படுத்துகிறது. அது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தம் குறையும்போது, இதய நோய் மற்றும் பக்கவாத நோய்கள் ஏற்படாது. நைட்ரேட்கள் அதிகம் உள்ள பீட்ரூட்கள் இதய நோய் ஏற்பட்டு வாழ்பவர்களுக்கு உதவுகிறது.

உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்

பீட்ரூட் சாறு பருகுவது உடற்பயிற்சி செய்யும் ஆற்றலை அதிகரிக்கிறது. உடற்பயிற்சிக்குப்பின்னர், தசைகள் ஓய்வெடுக்கும்போது, பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள், தசைகளுக்கு அதிகளவு ஆக்ஸிஜன்களைக் கொண்டுவருகிறது. இதனால் தசை செல்கள் குணமடைய உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

பீட்ரூட்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குடல் நன்முறையில் இயங்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. நார்ச்சத்துக்களுடன் இதில் உள்ள பீட்டாவைன்கள் ஃபேட்டி ஆசிட்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் நன்முறையில் செயல்பட உதவுகிறது. இது உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

குளூட்டாமைன் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று பீட்ரூட். இதில் உள்ள அமினோ அமிலங்கள், குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. காயம் மற்றும் மனஅழுத்தத்தில் இருந்து குடலை பாதுகாக்கிறது.

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது மூளைக்கு நன்மை அளிக்கிறது. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்வதுடன், உடற்பயிற்சியும் செய்யும்போது, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது. அதிகளவில் நைட்ரேட் எடுத்துக்கொள்வதும், மூளைத்திறன்களை அதிகரிக்கிறது.

மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது

மெனோபாஸ்க்குப் பின்னர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்துக்க அதிகரிக்கும். அப்போது நைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு பயனுள்ளதாகிறது. அது தமனிகளை நெகிழ்தன்மையுடன் வைத்துக்கொள்கிறது. ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது

இது ரத்தம் கை மற்றும் கால்களின் விரல்களில் சீராக பாயாத தன்மையை குறிக்கிறது. இதனால் வலி, மறத்துப்போவது, குத்துவதுபோன்ற உணர்வு ஆகியவை ஏற்படுகிறது. பீட்ரூட் சாறு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதை உறுதிப்படுத்தி, ரத்த அழுத்தத்தை குறைத்து, வீக்கத்தை சரிசெய்கிறது.

பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கலோரிகள் 29, புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது.

பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. பீட்ரூட்டில் உள்ள நற்குணங்களுக்காக அதை உணவில் சேர்த்துக்கொண்டு, பல்வேறு ரெசிபிகள் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.