தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Beer : என்ன பீர் குடித்தால் உங்களின் வாழ்நாள் நீடிக்குமா? எப்படி குடிக்கவேண்டும்? – வழிகாட்டி

Benefits of Beer : என்ன பீர் குடித்தால் உங்களின் வாழ்நாள் நீடிக்குமா? எப்படி குடிக்கவேண்டும்? – வழிகாட்டி

Priyadarshini R HT Tamil
May 03, 2024 04:45 PM IST

Benefits of Beer : மிதமான அளவில் எடுத்துக்கொண்டால் பீர் உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் எடுத்துக்கொள்ளாதவர் என்றால், தொடாதீர்கள்.

Benefits of Beer : என்ன பீர் குடித்தால் உங்களின் வாழ்நாள் நீடிக்குமா? எப்படி குடிக்கவேண்டும்? – வழிகாட்டி
Benefits of Beer : என்ன பீர் குடித்தால் உங்களின் வாழ்நாள் நீடிக்குமா? எப்படி குடிக்கவேண்டும்? – வழிகாட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

அதை மருந்துபோல் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. ஆனால் அதிகமானால், புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு என அனைத்து உபாதைகளுக்கும் ஆளாவீர்கள். பீரில் குறைவான அளவுதான் ஆல்கஹால் இருக்கும். மிதமான அளவில் பருகும்போது ஆரோக்கியத்தை வழங்குகிறது. பீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

இயற்கை உட்பொருட்கள்

பீரில் இயற்கையான உட்பொருட்கள் நிறைந்துள்ளது. இதில் பிரிசர்வேடிவ்கள் மற்றும் அடிடிவ்கள் இல்லை. ஆனால் பீரில் ஆரஞ்சு பழச்சாறோ அல்லது பாலோதான் இருக்கும். இதில் உள்ள ஆல்கஹாலே இதற்கு பிரிசர்வேடிவாக இருக்கும். இதை தயாரித்து, புளிக்க வைத்து, வடிகட்டி, பாட்டிலில் நிரப்பப்படுகிறது.

கலோரிகள் குறைவு, கொழுப்பு இல்லை மற்றும் கார்போஹைட்ரேட் குறைவு

இயற்கை பானம் என்பதால், இதில் கொழுப்பு இல்லை. கலோரிகள் குறைவு. டீ, ப்ளாக் காபி மற்றும் தண்ணீரில் உள்ளதைப்போல் கலோரிகள் குறைவு. ஒரு அவுன்ஸ் பீரில் 12 கிராம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது

பீரில் கொழுப்பு இல்லை. உங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. இதை மிதமான அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்பு அளவில் மாற்றம் ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அடித்து துரத்திவிட்டு, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

உங்கள் உடலை குளிர்ச்சியாக வைக்கிறது

குறைவான அளவு பீர் அருந்தும்போது, அது உங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்களுக்கு விருப்பமானவருடன் சேர்ந்து சென்று சிறிது பீர் குடித்து உங்கள் மனதை அமைதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

பீரில் ஓ மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளது

பீரில் வடிகட்டாத அல்லது கொஞ்சம் வடிகட்டியது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. பீரில் வைட்டமின் பி சத்துக்கள் உள்ளது. குறிப்பாக இதில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது மாரடைப்பை ஏற்படுத்துவதை தடுக்கிறது.

இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் ஆரோக்கியமற்ற குப்பை உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் கொழுப்புக்களை அடித்து துரத்துகிறது. இதில் குறிப்பிட்ட அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளன.

தண்ணீரைவிட பாதுகாப்பானது

உங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்காத இடத்தில் பீர், பாதுகாப்பான பானமாக உள்ளது. பாட்டிலில் அடைத்து பருகப்படும் தண்ணீரைவிட பாதுகாப்பானது. 

இதை தயாரிக்கும்போது கொதிக்கவைத்து, சுத்தம் செய்து, பாட்டிலில் அடைத்து, சீலிட்டு தருகிறார்கள். இல்லாவிட்டால், இது பிரச்னைகளை ஏற்படுத்தினால், இதை விற்பனை செய்ய முடியாது என்பதால், இது தரமானமாக தயாரிக்கப்படுக்கிறது.

பீர், மாரடைப்பை தடுக்கிறது

ரெட் வைனில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அதே அளவுக்கு பீரிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. வைனை மிதமாக எடுத்துககொள்ளும்போது அது இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பீர், புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது

சென்தோஹீயுமல் என்ற ஃப்ளேவனாய்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் எண்சைம்களை கட்டுப்படுத்துகிறது. பீர் தயாரிக்கும் அதை அதிமாக்கி தயாரித்தால் உங்கள் உடலுக்கு நன்மை கொடுக்கிறது.

உடல் எடையை அதிகரிக்காது

பீர் பருகுவது உங்கள் உடல் எடையை அதிகரிக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது அன்றாடம் மிதமான அளவு பீர் கொடுப்பவர்களை பரிசோதித்து கண்டுபிடிக்கப்பட்டது. 

பீர், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. உங்கள் உடல் கொழுப்பை உறிஞ்சுவதை தடுக்கிறது. உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.

இத்தனை நன்மைகளுக்காக பீர் பருகலாம். ஆனால் அளவுதான் மிகவும் குறைவாக இருக்கவேண்டும்.

மற்ற மதுபானங்களைவிட பீரில் குறைவான அளவு ஆல்கஹால் உள்ளது. நீங்கள் பருகும் பீரைப்பொறுத்து இதில் உள்ள ஆல்கஹாலின் அளவு வேறுபடும். 340 மில்லி லிட்டர் பீரில், 153 கலோரிகள் உள்ளது. புரதம் 1.6 கிராமும், கொழுப்பு 0 கிராமும், கார்போஹைட்ரேட் 13 கிராமும், அன்றாடதேவையில் 7 சதவீதம் ரிபோஃப்ளாவினும், 5 சதவீதம் மெக்னீசியமும், 4 சதவீதம் பாஸ்பரசும், 4 சதவீதம் செலினியமும் உள்ளது.

யாரெல்லாம் பீர் குடிக்கக்கூடாது?

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்

இன்சோமேனியா எனப்படும் உறக்க் கோளாறு உள்ளவர்கள்

வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்

கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள்

அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளவர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்