தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Anise Tea Dispels Body Fatigue And Invigorates Three Days A Week This Drink Alone Is Enough

Benefits of Anise Tea : உடல் சோர்வை அடித்து விரட்டி, உற்சாமூட்டும்; வாரத்தில் மூன்று நாள் இந்த பானம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 18, 2024 10:00 AM IST

Benefits of Anise Tea : வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவை இருந்தால், இதை வாரத்தில் மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம். சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று முறை கூட பருகலாம்.

Benefits of Anise Tea : உடல் சோர்வை அடித்து விரட்டி, உற்சாமூட்டும்; வாரத்தில் மூன்று நாள் இந்த பானம் மட்டும் போதும்!
Benefits of Anise Tea : உடல் சோர்வை அடித்து விரட்டி, உற்சாமூட்டும்; வாரத்தில் மூன்று நாள் இந்த பானம் மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

சிலருக்கு கால நிலை மாறும்பபோது, ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசக்கோளாறுகள் ஏற்படும். குளிர் மற்றும் மழைக்காலங்களில் அவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதனால் அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுகிறது.

40 வயதை தாண்டினால் உடலில் அசதி ஏற்படும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதது போன்ற நிலை ஏற்படும். உடலில் போதிய ஆற்றல் இல்லாமல் உடலில் சோர்வு ஏற்படும். அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.

இவையனைத்தையும் சரிசெய்வது எப்படி என்று தெரியுமா?

தேவையான பொருட்கள்

சோம்பு – 2 ஸ்பூன்

வெல்லம் – சிறிய கட்டி

ஏலக்காய் – 2

சோம்பின் நன்மைகள்

அஜீரண கோளாறை முற்றிலும் நீக்குவது சோம்பு. இதனால் இதை அசைவ உணவு சாப்பிட்ட பின்னர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அதிகளவில் இரும்புச்சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளது. நமது உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது.

30 வயது துவங்கினாலே உடலின் ஆற்றல் குறையத் துவங்கும். கண் பார்வைத்திறன் குறையத் துவங்கும். அதற்கு சோம்பை தொடர்ந்து எடுத்து வந்தால், பார்வை குறைபாட்டை சரிசெய்யும். உடலில் சோர்வு நீங்கி, ரத்த அழுத்தம் குறைந்து உடல் சீராக செயல்பட உதவும்.

சிறுநீரை சுத்தப்படுத்தும், தாய்ப்பாலை அதிகரிக்கும். இதை அன்றாட உணவில் சேர்ப்பதால், மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறுகள், மாதவிடாய் கோளாறு போன்ற பல்வேறு பிரச்னைகளை சரிசெய்து நமது உடலுக்கு தேவையான நன்மைகளை வழங்குகிறது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வயிற்றில் பூச்சிகள் பிரச்னையை சரிசெய்யும். அந்த பூச்சிக்கள் நமது உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவிடாமல் தடுக்கிறது. அந்த பூச்சிகளை வெளியேற்றக்கூடிய தன்மை சோம்புக்கு உள்ளது.

அல்சர் உள்ளவர்களுக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படும். அதற்கு அவர்கள் சோம்பை சிறிதளவு எடுத்துக்கொள்ளும்போது, வாயில் வெறும் சோம்பை மென்றாலே வாய்துர்நாற்றம் நீங்கும். வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணும் குணமாகும். பற்களில் உள்ள கிருமிகளையும் நீக்கும்.

வெல்லத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நமது உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும். ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் வெல்லத்தை தினமும் சாப்பிட பலன் நிச்சயம். மூட்டு வலியை நீக்கும் தன்மை வெல்லத்துக்கு உண்டு.

செய்வதும், பயன்படுத்துவதும் எப்படி? 

ஒது பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதில் சோம்பு மற்றும் ஏலக்காயை உடைத்து சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். அதில் சிறிய கட்டி வெல்லத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி இரவில் உறங்கச் செல்லும் முன் பருகினால் மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றிலும் பருகலாம்.

வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவை இருந்தால், இதை வாரத்தில் மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம். சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று முறை கூட பருகலாம்.

உடலுக்கு நல்ல ஆற்றலைக்கொடுத்து, சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகள் இருக்காது. கட்டாயம் முயற்சித்து பலன் பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்