Benefits of Amla Shot : ஆம்லா ஷாட்; நெல்லிக்காய் சாறுதான்! தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள் என்ன?
நெல்லிக்காய்ச் சாறு தினமும் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினமும் நீங்கள் நெல்லிக்காய்ச் சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? நெல்லிக்காய் நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். அதில் உள்ள அதிகப்படியான நார்சத்து மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. மேலும் உள்ள வைட்டமின் C உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் b5, b6 உடன் அடிப்படை ஆதார வித்தாக விளங்குகிறது, மேலும் இதில் அடங்கியுள்ள பொட்டாசியம், மாங்கனீஸ், செம்பு ஆகிய கனிமங்கள் உடலின் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும். நெல்லியில் பெருநெல்லி, சிறு நெல்லி, கரு நெல்லி, செந்நெல்லி என நான்கு வகைகள் உண்டு. இதில் பெருநெல்லி பெரும்பாலும் நம்முடைய அன்றாட பயன்பாட்டில் இருக்கக்கூடியது. இயல்பான நாட்டு ரக நெல்லிக்காய்கள் மே மாதக் கடைசி முதல் செப்டம்பர் மாத தொடக்கம் வரை கிடைக்கக்கூடியவை.
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறிது. இது உடலில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
நீங்கள் நெல்லிக்களை அன்றாடம் எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதற்கு உதவுகின்றன.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
நெல்லிக்காய் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் இயற்கை நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன. நெல்லிக்காய் உங்கள் உடலில் உள்ள பொதுவான செரிமான பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற கோளாறுகளை சரிசெய்கிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
நெல்லிக்காய் உங்கள் சருமத்துக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது உங்கள் சருமத்தில் வயோதிகத் தன்மை, இளம் வயதிலேயே ஏற்படாமல் தடுக்கிறது. இது உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்குகிறது. இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள் இதற்கு உதவுகிறது.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
நீங்கள் அன்றாடம் நெல்லிக்காயை சாப்பிடும்போது அது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது. இது தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கும் நிலையைப் போக்குகிறது.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
நெல்லிக்காயில் உள்ள உட்பொருட்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்யை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலின் குளுக்கோஸ் வளர்சிதையை மேம்படுத்துகிறது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.
உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது
நெல்லிக்காயில் உள்ள கழிவுநீக்கும் குணங்கள் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. இது உங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடியது. எனவே தினமும் நெல்லிச்சாற்றை பருகுவதால் அது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இது உங்கள் உடலின் கழிவுநீக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் கழிவு நீக்க உறுப்புக்களின் சிரமத்தைக் குறைக்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்