Benefits of Aloevera : மூட்டுகள் மற்றும் எலும்புக்கு வலு சேர்க்கும் கற்றாழையில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!
Benefits of Aloevera : மூட்டுகள் மற்றும் எலும்புக்கு வலு சேர்க்கும் கற்றாழையில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!
கற்றாழை உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. சருமம் மற்றும் கூந்தலுக்கு பளபளப்பை அளிக்கக்கூடியது. அதனால்தான் கற்றாழை அழகுசாதன பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மருத்துவ மூலிகையாகவும் உள்ளது. இதை உட்கொள்ளும்போது கற்றாழை உடலுக்கும் ஆரோக்கியத்தை வழங்கக்கூடியது.
கற்றாழையில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்
கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்தது
மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழையை நாம் வெளிப்புறத்தில் பயன்படுத்துவதற்கு மட்டுமே உகந்தது என்று கருதுகிறோம். ஆனால் அதை உட்கொள்வதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இது செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
கற்றாழையில் பாலிசாச்சாரைட்கள் உள்ளது. அது செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வை கட்டுப்படுத்துகிறதுடன், செரிமானத்தில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது.
ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச உதவுகிறது
கற்றாழை, உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனுக்கும் உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைய உதவுகிறது
கற்றாழையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் டி சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறவும். உடலை பாதுகாக்கவும் உதவுகிறது.
அழ்ற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது
கற்றாழையில் அழற்சி எதிர்ப்புத்தன்மை உள்ளது. இது உடலில் வீக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆர்த்ரட்டிஸ் உள்ளிட்ட வீக்க பிரச்னைகளுக்கு இது தீர்வுகொடுக்கிறத.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நன்மையளிக்கிறது. இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
கற்றாழையில் வாயில் படியும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது இயற்கை பற்பசைகள் (பேஸ்ட்) மற்றும் மவுத் வாஷ்களில் பயன்படுத்தப்படுகின்றன. வாய் துர்நாற்றத்தைபோக்கு வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
கொழுப்பு அளவுகளில் இது நேர்மறையாக செயல்படுகிறது. இது உடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது
கற்றாழை உடல் எடையை மேலாண்மை செய்வதில் உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து அதிக ஸ்னாக்ஸ்கள் சாப்பிடுவதை தடுத்து, கலோரிகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது.
மூட்டுகள் மற்றும் எலும்பை ஆரோக்கிமாக வைக்க உதவுகிறது
கற்றாழையில் உள்ள வீக்கத்துக்கு எதிராக தன்மை, மூட்டு வலியை போக்குகிறது. மூட்டுகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ரிமாட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் போன்ற மூட்டு, எலும்பு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த கற்றாழை அன்றாடம் பல்வேறு நன்மைகளை பெறுவதற்காக பயன்படுத்தி மகிழ்ந்திருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்