தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

Priyadarshini R HT Tamil
May 20, 2024 04:16 PM IST

Benefits of Aloe Vera Juice : கற்றாழைச்சாறு பருகுவதால் ஏற்படும் முத்தான பத்து நன்மைகளை தெரிந்தகொள்ளுங்கள்.

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!
Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

உடலில் சீரான அமிலத்தன்மையை பராமரிக்கிறது

உடலில் நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்வியல் மாற்றம் ஆகிய காரணங்களால், சில நேரங்களில் உடலின் அமில அளவில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் உடலில் அமில அளவு அதிகரித்து உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இதில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், அமிலத்தை உருவாக்கி பல்வேறு நோய்களையும் உருவாக்குகிறது. உடலில் இருந்து அசிடிட்டியை வெளியேற்றுகிறது மற்றும் இது உடலின் அமில அளவையும் சரியாக பராமரிக்கிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இது உடல் தேவையான ஆற்றலை அதிகம் உறிஞ்ச உதவும்.

நீர்ச்சத்துக்கள் நிறைந்தது

கற்றாழையில் வைட்டமின்கள், எண்சைம்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைக்க உதவுகிறது. உடல் கழிவை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது. கற்றாழைச்சாறை உடற்பயிற்சிக்குப்பின்னர் பருகுவது, பயிற்சியால் உடல் இழந்த தண்ணீரை சமப்படுத்த உதவுகிறது.

கல்லீரல் செயல்பாடு

உங்கள் உடலில் கல்லீரல் சரியாக செயல்படவில்லையென்றால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. இறுதியில், வயிறு உப்புசம், வலி, வாயுத்தொல்லை, வாய் துர்நாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. கற்றாழைச்சாறில் உள்ள ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது.

மலச்சிக்கலுக்கு ‘நோ’ சொல்லுங்கள்

கற்றாழைச்சாறு, குடலுக்கு நல்ல உணர்வைக் கொடுக்கும். இதில் ஆந்த்ராகுயினனன்கள் உள்ளது. இது இயற்கை மலமிலக்கியாகும். இதனால் செரிமானம் மேம்படுகிறது. கற்றாழைச்சாறில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்துக்கள், குடலிலும் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. உங்கள் குடல் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

கற்றாழையில் வைட்டமின்கள், மினரல்கள் உள்ளது. வைட்டமின் பி, சி, இ மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. சிறிய அளவிலான கால்சியம், காப்பர், குரோமியம், சோடியம், செலினியம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் சிங்க் ஆகிய சத்துக்கள் உள்ளது. வைட்டமின் பி மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பை பராமரிக்கிறது. இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. வைட்டமின் இ, புற்றுநோயிடம் இருந்து உடலை காக்கிறது. ஃபோலிக் அமிலம் இதய நோய் மற்றும் பக்கவாத ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.

நெஞ்செரிச்சலை போக்குகிறது

கற்றாழைச்சாறில் உள்ள ஆல்கலைன் உட்பொருட்கள், நெஞ்செரிச்சலை குறைக்கிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களை நடுநிலைப்படுத்துகிறது. கற்றாழைச்சாறில் உள்ள உட்பொருட்கள் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை கட்டுப்படுத்துகிறது. இது வாயுத்தொல்லையைப் போக்குகிறது. அல்சரை குணப்படுத்துகிறது. அது அதிகரிக்காமல் தடுக்கிறது.

இதை பருகினாலும் நீங்கள் ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

உங்களுக்கு ஆசிட் ரிஃபிளக்ஸால் நீங்கள் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் எரிச்சல் ஊட்டும் குடல் பிரச்னைகள் எற்பட்டால், கற்றாழைச்சாறு உங்களுக்கு சிறந்த தீர்வு தரக்கூடியது. உங்களின் செரிமான மண்டலம், உங்கள் உடல் நன்றாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு நன்றாக இயங்கவேண்டும். சர்க்கரையையும், கொழுப்பையும் உடைக்கும் எண்சைம்கள் கற்றாழையில் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்தை நன்றாக இயங்கச்செய்கிறது.

எடையிழப்புக்கு உதவுகிறது

கற்றாழையில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் வாயுமண்டலத்துடன், நல்ல பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த மண்டலம்தான் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. உங்கள் உடலில் அதிகம் வளர்சிதை இருந்தால், அது உங்கள் உடலில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. கற்றாழைச்சாறில் உள்ள வைட்டமின் பி, பசியை தூண்டுகிறது. செரிமானத்துக்கும் அதுவே உதவுகிறது. வயிறு ஆரோக்கியத்துக்கும், நச்சுக்களை போக்குவதற்கும் உதவுகிறது. இதனால் உங்கள் உடல் சரியான அளவில் எடையை பராமரிக்கிறது.

கற்றாழையை எடுத்து அலசிவிட்டு அதன் தோலை நீக்கி உள்ளே ஜெல்போன்ற பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மிக்ஸிஜாரில் மோருடன் சேர்த்து அடித்து வடிகட்டி சிறிது இந்துப்பு சேர்த்து பருகவேண்டும்.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

கற்றாழைச்சாறில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை நீக்க உதவுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் மண்ணீரல் ஆகிய அனைத்தையும் சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால், அது நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது

கற்றாழைச்சாறு, இந்த கடுமையான வாழ்க்கை சூழலுக்குத் தேவையான நன்மைகளை வழங்குகிறது. எனவே இந்த கற்றாழைச்சாறை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலின் தசை மண்டலத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களைக் கொடுக்கிறது. ஒரு டம்ளர் கற்றாழைச்சாறு உங்கள் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்