Benefits of Ajwain : ஓமம், மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Ajwain : ஓமம், மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!

Benefits of Ajwain : ஓமம், மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 28, 2025 03:48 PM IST

Benefits of Ajwain : ஓமம், மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Ajwain : ஓமம், மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!
Benefits of Ajwain : ஓமம், மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!

பற்கள் ஆரோக்கியம்

ஓமத்தை நீங்கள் மென்று சாப்பிடும்போது, அது உங்களுக்கு புத்துணர்வு நிறைந்த சுவாசத்தைக் கொடுக்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. ஈறுகளில் உள்ள தொற்றுக்களை குணப்படுத்துகிறது. பற்களின் வலியை குணப்படுத்துகிறது. இது உங்களுக்கு நல்ல சிறப்பான வாய் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வாயில் ஏற்படும் தொற்றுக்களையும் தடுக்கிறது.

தொற்றுக்களை தடுக்கிறது

ஓமத்தில் உள்ள தைமோல் என்ற உட்பொருளில் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது பாக்டீரியா மற்றும் பூஜ்ஜை தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. இது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உடலில் உள்ள நோய்களை அடித்து விரட்டி, உடலை எதிர்த்து போராடுகிறது.

உடல் வளர்சிதையை ஊக்கப்படுத்துகிறது

ஓமத்தை நீங்கள் வழக்கமாக சாப்பிடும்போது, அது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இதனால் உங்களால் உடல் எடையை முறையாகப் பராமரிக்க முடிகிறது. இது உங்கள் உடலின் ஆற்றல் அளவுகளை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த திறனையும் மேம்படுத்துகிறது.

மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது

இதில் உள்ள வலிப்பு குறைக்கும் திறன்கள், உங்கள் கருப்பையில் உள்ள திசுக்களை அமைதிப்படுத்துகிறது. இதனால் உங்கள் உடலுக்கு இயற்கை நிவாரணம் கிடைக்கிறது. இது உங்கள் வயிற்றில் ஏற்படும் வலியைப் போக்குகிறது. குறிப்பாக மாதவிடாய் நாட்களில் உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கிறது. இது பெண்களுககு தேவையான சவுகர்யங்களைக் கொடுக்கிறது.

சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது

ஓமத்தில் உள்ள தைமோல் என்ற உட்பொருள், உங்கள் சுவாசப்பாதையில் உள்ள பல்வேறு அடைப்புகள் மற்றும் தேங்கங்களை சுத்தம் செய்து, நீங்கள் எளிதாக சுவாசிக்க உதவுகிறது. இது குறிப்பாக உங்களுக்கு ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பொதுவான சளித்தொல்லை ஆகியவற்றைப் போக்குகிறது.

அசிடிட்டியை குணப்படுத்த உதவுகிறது

ஓமத்தை மென்று சாப்பிடும்போது, அது வயிற்றில் உள்ள அமிலங்களை சமப்படுத்துகிறது. இது உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. இது உங்களின் செரிமான மண்டலத்துக்கு இதமளிக்கிறது. இது உங்கள் வயிற்றில் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது. இது உங்களுக்கு ஆசிட் எதிர்ப்பு ஏற்படுத்தும் தொல்லைகளைக் குறைக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

ஓமத்தில் உள்ள செரிமான எண்சைம்கள், உங்களின் வயிறு உப்புசத்தை குணப்படுத்துகிறது. உங்களுக்கு வாயு அல்லது செரிமானமின்மை கோளாறுகள் ஏற்பட்டால் அதைத் தடுக்கிறது. ஓமம் எடுத்துக்கொள்வதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்களுக்கு ஆரோக்கியமான குடலை உறுதி செய்கிறது. இது உங்களின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. உங்களுக்கு சாப்பிட்டவுடன் ஏற்படும் வயிறு உப்புசத்தைப் போக்குகிறது.

ரத்த அழுத்தத்தைப் முறைப்படுத்துகிறது

ஓமத்தில் அதிகளவில் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள ரத்த நாளங்களுக்கு இதமளிக்கிறது. இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஓமம் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மூட்டு வலிகளைக் குறைக்கிறது

ஓமத்தில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், மூட்டு வலி ஏற்படுத்தும் தொல்லைகளை தீர்க்க உதவுகிறது. இது மூட்டுகளில் உள்ள இறுக்கம் மற்றும் வலியைப் போக்குகிறது. இதை நீங்கள் உட்கொள்வது அல்லது அரைத்து மூட்டுகளில் பூசுவது இரண்டுமே மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.