Belly Shrinking Drink : தொங்கும் தொப்பை சரசரவென கரைந்து ஓடணுமா? எடையும் எகிறாமல் இருக்க இதோ இந்த பானம் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Belly Shrinking Drink : தொங்கும் தொப்பை சரசரவென கரைந்து ஓடணுமா? எடையும் எகிறாமல் இருக்க இதோ இந்த பானம் உதவும்!

Belly Shrinking Drink : தொங்கும் தொப்பை சரசரவென கரைந்து ஓடணுமா? எடையும் எகிறாமல் இருக்க இதோ இந்த பானம் உதவும்!

Priyadarshini R HT Tamil
Jul 20, 2024 12:58 PM IST

Belly Shrinking Drink : தொங்கும் தொப்பையை சரசரவென கரைந்துதோட வைக்கவேண்டுமா? எடையும் எகிறாமல் இருக்க வேண்டுமெனில் இதோ இந்த பானம் அதற்கு உங்களுக்கு உதவும்.

Belly Shrinking Drink : தொங்கும் தொப்பை சரசரவென கரைந்துதோடணுமா? எடையும் எகிறாமல் இருக்க இதோ இந்த பானம் உதவும்!
Belly Shrinking Drink : தொங்கும் தொப்பை சரசரவென கரைந்துதோடணுமா? எடையும் எகிறாமல் இருக்க இதோ இந்த பானம் உதவும்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடல் பருமன்

உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்னையும் ஆகும். இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது.

இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்னைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது.

சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன.

ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

சுருள் பட்டை – 100 கிராம்

சீரகம் – 50 கிராம்

கருஞ்சீரகம் – 50 கிராம்

செய்முறை

சுருள் பட்டை, சீரகம், கருஞ்சீரகம் மூன்றையும் வெயிலில் உலர்த்தி நன்றாக காய்ந்தவுடன், பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அதில் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவேண்டும்.

இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைத்து வெளியில்தான் வைக்கவேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. வெளியில் வைத்தால்தான் பலன்.

நாளொன்றுக்கு மூன்று முறை ஒரு ஸ்பூன் பவுடரை, ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். 

பின்னர் அதை வடிகட்டி, அதில் உங்களுக்கு சுவை வேண்டுமென்றால், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம் இல்லாவிட்டால் அப்படியே பருகலாம். இனிப்பாக வேண்டுமென்றால் தேன், உப்பு சுவை வேண்டுமென்றால் இந்துப்பு சேர்த்து பருகவேண்டும்.

இதை சாப்பிடும் முன், பின் என்ற கணக்கு பார்க்க தேவையில்லை. உங்கள் வழக்கமான சூடான ஆகாரங்களுக்கு பதிலும் எடுத்துக்கொள்ளலாம். 

இல்லாவிட்டால் அவற்றை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட இடைவெளிவிட்டும் எடுத்துக்கொள்ளலாம். இதை தினமும் பருகிவந்தால், உங்கள் தொப்பை சரசரவென சுருங்கி தட்டையாவதுடன் உடல் எடையும் கணிசமான அளவு குறையும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.