Belly Fat : வெளியே தொங்கும் தொப்பையால் தொல்லையா? ஆரோக்கியமாக கொழுப்பை குறைக்க வழிகள்!
Belly fat : உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு என என்ன செய்தாலும் தொப்பை குறையமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? அதற்கு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தொப்பை கொழுப்பு அல்லது உள்ளுறுப்பு கொழுப்பு அனைத்து உடல் கொழுப்புகளுமே நமக்கு தொல்லை தருபவைதான். எனவே நீரிழிவு, இதய பிரச்னை அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நாள்பட்ட உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க உடனடியாக கவனிக்கவேண்டும். உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களின் தொகுப்பைப் பகிர்ந்து கொள்கிறார்.
தொப்பை கொழுப்புக்கான காரணங்கள்
உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாததால், வயிற்றுப்பகுதியில் அதிகளவில் தொப்பை ஏற்படுகிறது. அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட குப்பை உணவுகளை உட்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு, அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வது ஆகியவை துரத்தமுடியாத தொப்பை கொழுப்பை குவிக்க வழிவகுக்கும்.
ஆரோக்கியமான கொழுப்புகளை உண்ணுங்கள்
ஊறவைத்த கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற நல்ல கொழுப்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்குவது தொப்பை கொழுப்பை எரிக்க உதவும்.