Beetroot Poori : பீட்ரூட் பூரி! புசுபுசுன்னு உப்பலா, பிங்க் நிறத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
Beetroot Poori : புசுபுசுன்னு உப்புலா பீட்ரூட் பூரி செஞ்சு கொடுங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
பீட்ரூட் – 1 (மீடியம் அளவு)
நெய் – அரை ஸ்பூன்
சர்க்கரை – கால் ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் அல்லது துருவிக்கொள்ளவேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த பீட்ரூட்டை வடிகட்டி வைத்து சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். அரைத்த பீட்ரூட்டை மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அதேபோல பிழிந்து கொள்ளவேண்டும்.
அகலமான பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு, நெய், சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். பின்னர் பிட்ரூட் சாறை சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவேண்டும்.
உள்ளங்கையில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை பிசைந்த மாவின் மேலே தடவி 10 நிமிடங்கள் மூடி வைக்கவேண்டும்.
பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவேண்டும். உருட்டிய மாவை கோதுமை மாவை தொட்டு அல்லது சிறிது தேங்காய் எண்ணெய் தடவி சிறு சிறு வட்டங்களாக தேய்த்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு கரண்டியால் லேசாக அழுத்தி மெதுவாக திருப்பிப் போட்டு பொரித்து எடுக்கவேண்டும்.
நெய் சிறிது சேர்க்கும்போது பூரி மிருதுவாக இருக்கும். அதிக அளவு சேர்க்க வேண்டாம்.
பூரியை தேய்க்கும்போது சமமாக சப்பாத்தியை விட சிறிது கனமாக தேய்த்துக் கொள்ளவேண்டும். அப்படி செய்யும்போது பூரி சமமாக உப்பலாக வரும்.
எண்ணெய் அதிகளவில் புகையும் வரை காய விடவுக்கூடாது. அப்படி காய்ந்து விட்டால் பூரியின் நிறம் மாறிவிடும்.
பீட்ரூட்டின் நன்மைகள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
இதய நோய் ஆபத்தை குறைக்கும்.
உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். ஆற்றல் அளவை அதிகரிக்கும்.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மெனோபாஸ்க்கு முந்தைய காலத்திற்கு பயனுள்ளது.
ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப்போக்குகிறது.
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கலோரிகள் 29, புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது.
பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. பீட்ரூட்டில் உள்ள நற்குணங்களுக்காக அதை உணவில் சேர்த்துக்கொண்டு, பல்வேறு ரெசிபிகள் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்