பீட்ரூட் இட்லி : பீட்ரூட் இட்லி; காலையிலேயே சுவையான, கலர்ஃபுல்லான டிஃபன்! குழந்தைங்க கிட்ட காட்டிடாதீங்க!
பீட்ரூட் இலை : ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். பீட்ரூட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இட்லியை செய்துகொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களையும் பீட்ரூட் சாப்பி வைத்ததைப் போலாகும். எனவே இந்த பீட்ரூட் இட்லியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

பீட்ரூட் இட்லி என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கலர்ஃபுல்லான ஒரு உணவாகும். இது கிளாசிக் தென்னிந்திய உணவாகும். இயற்கை பிங்க் நிறத்தைக் கொடுப்பது பீட்ரூட் சேர்ப்பதால், இந்த இட்லி என்பது உங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காலை உணவாகும். குறிப்பாக குழந்தைகள் இந்த இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் எது இருந்தாலும் அது நன்றாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். பீட்ரூட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இட்லியை செய்துகொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களையும் பீட்ரூட் சாப்பி வைத்ததைப் போலாகும். எனவே இந்த பீட்ரூட் இட்லியை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• ரவை – ஒரு கப்
• உளுந்து – அரை கப்
• பீட்ரூட் – 1 (துருவியது)
• இஞ்சி – அரை இன்ச்
• பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
• எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
• கடுகு – ஒரு ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. உளுந்து மற்றும் ரவையை ஊறவைத்து, தண்ணீர் ஊற்றி அரைத்து புளிக்கவைத்துக்கொள்ளவேண்டும்.
2. பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயுடன் சேர்த்து நல்ல பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
3. புளித்த மாவையும், பீட்ரூட் கலவையையும் ஒன்றாக கலந்துகொள்ளவேண்டும். அதில் உப்பு சேர்த்து கலந்துவிட்டு தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். இந்த தாளிப்பையும் இட்லி மாவில் சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளவேண்டும்.
5. இட்லி பாத்திரத்தில் இட்லிகளை ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இட்லிகள் ஆறியவுடன் சாம்பார் மற்றும் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
குறிப்பு
• நீங்கள் வழக்கமான இட்லி மாவு வைத்திருந்தால், அதில் கூட சேர்த்து பீட்ரூட் கலவை மற்றும் தடுக்காவை சேர்த்து கலந்து இட்லிகளாக செய்யலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும்.
• இதில் சிறிது சேமியாவையும் மேலே தூவி விட்டால் இன்னும் கூடுதல் அட்ராக்சன் இட்லிக்கு கிடைக்கும்.
சுவையும், சத்துக்களும் நிறைந்த இந்த பீட்ரூட் இட்லியை ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்