பீட்ரூட் பொரியல் : பீட்ரூட்டில் இப்படி ஒரு பொரியல்; சாதம், சப்பாத்தி இரண்டுக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது! இதோ ரெசிபி!
பீட்ரூட் பொரியல் : பீட்ரூட்டில் இப்படி ஒரு பொரியலை நீங்கள் எளிதாக செய்துவிட முடியும். இதை சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

பீட்ரூட்டில் 29 கலோரிகள், புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பீட்ரூட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது. ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது. இத்தனை ஆரோக்கியமான பீட்ரூட்டில் இந்த பொரியலை ஈசியாக செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
• பீட்ரூட் – 2 (பொடியாக நறுக்கியது)
• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• உப்பு – தேவையான அளவு
• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
• தேங்காய் துருவல் – ஒரு கப்
• பச்சை மிளகாய் – 1
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
1. ஒரு கடாயில் எண்ணெய் பொடியாக நறுக்கிய பீட்ரூட், பெரிய வெங்காயம், உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கறிவேப்பிலை என அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கையில் பிசைந்து கலந்துகொள்ளவேண்டும். நன்றாக கலந்துவிடவேண்டும்.
2. எண்ணெயையும் சேர்த்து உப்பு சரிபார்த்து 20 நிமிடங்கள் மூடி வைத்துவிடவேண்டும். இதை ஒரு கடாயில் சேர்த்து அடுப்பில் சிறிது நேரம் மூடிவைத்து வேகவிடவேண்டும். பீட்ரூட்டை துருவியுடம் சேர்க்கலாம் அல்லது மிகப்பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.
3. மூடி வைத்துவிட்டு, அவ்வப்போது திறந்து பார்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறிவிட்டுக்கொண்டேயிருந்தால், சிறிது நேரத்தில் நன்றாக வெந்துவரும். பீட்ரூட் நன்றா
மேலும்க வெந்தவுடன் இறக்கிவேண்டும். சூப்பர் சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.
இதை சாதம், சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் தயிர் சேர்த்து கலந்தால் பீட்ரூட் பச்சடியாகிவிடும். அதையும் சாதம் மற்றும் சப்பாத்தி என எதனுடனே வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

டாபிக்ஸ்