பீட்ரூட் சட்னி : சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியான பீட்ரூட் சட்னி.. ரெம்ப ஈசியா செய்யலாம் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பீட்ரூட் சட்னி : சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியான பீட்ரூட் சட்னி.. ரெம்ப ஈசியா செய்யலாம் பாருங்க!

பீட்ரூட் சட்னி : சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியான பீட்ரூட் சட்னி.. ரெம்ப ஈசியா செய்யலாம் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Mar 07, 2025 05:30 AM IST

பீட்ரூட் சட்னி : கார சாரமான சட்னி செய்தால் அது சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு மிகவும் ருசியாக இருக்கும். இந்த சட்னியை எப்படி ருசியாக செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

பீட்ரூட் சட்னி : சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியான பீட்ரூட் சட்னி.. ரெம்ப ஈசியா செய்யலாம் பாருங்க!
பீட்ரூட் சட்னி : சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியான பீட்ரூட் சட்னி.. ரெம்ப ஈசியா செய்யலாம் பாருங்க!

பீட்ரூட் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

  • எண்ணெய் - 5 ஸ்பூன்
  • உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
  • கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்- 10
  • பூண்டு - 5 பல்
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • பீட்ரூட் - 2
  • பச்சை மிளகாய் -3
  • மிளகாய் வத்தல் - 2
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • புதினா - சிறிதளவு
  • தேங்காய்- 1 கப்

தாளிப்புக்கு தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு உளுந்து - 1 ஸ்பூன்

மிளகாய் வத்தல் - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பீட்ரூட் சட்னி செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதள3 ஸ்பூன் அளவு எண்ணெய் விட வேண்டும். 1 ஸ்பூன் உளுந்து மற்றும் 1 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். பருப்பு நிறம் மாற ஆரம்பிக்கும் போது, ஒரு ஸ்பூன் சீரகம், அதில் 10 சின்ன வெங்காயம், சிறிய துண்டு இஞ்சி, 5 பூண்டு பற்கள், ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் 1 பெரிய பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். பீட்ரூடை 5 நிமிடம் வரை மிதமான தீயில் வைத்து கலந்து விட வேண்டும். கடைசியாக தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். கடைசியாக அதில் சிறிதளவு புதினா மற்றும் கொத்த மல்லி இலைகளை சேர்த்து வதக்க கொள்ள வேண்டும்.

பின்னர் வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்து கொள்ளுங்கள். இந்த சட்னியை மேலும் சுவை கூட்ட ஒரு தாளிப்பு சேர்க்கலாம்.

தாளிப்புக்கு ஒரு கரண்டியை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் 1 மிளகாய் வத்தல் சேர்க்க வேண்டும். கடைசியாக ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பை சட்னியில் சேர்த்து விடலாம். இதன் ருசி அருமையாக இருக்கும். சூடான சாதம், சப்பாத்தி , தோசையோடு சேர்த்து சாப்பிடலாம். பிரெட்டுடன் இந்த சட்னியை சேர்த்து சாப்பிடுவது ருசியாக இருக்கும்.

பீட்ரூட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.