Beet-Egg Poriyal : பீட்ரூடில் இப்படி ஒரு வித்யாசமான பொரியல் செய்ய முடியுமா? செய்து பாருங்கள்!
Beet-Egg Poriyal : பீட்ரூடில் இப்படி ஒரு வித்யாசமான பொரியல் செய்ய முடியுமா? செய்து பாருங்கள். சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 3 நறுக்கியது
ட்ரெண்டிங் செய்திகள்
முட்டை - 5
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 8 பற்கள்
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
தண்ணீர் - அரை கப்
எண்ணெய் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை -
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். அனைத்தும் பொரிந்து வந்தவுடன், அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அவற்றை பொரியவிடவேண்டும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவேண்டும். நறுக்கிய பீட்ரூட் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
பின்னர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிட்டு 10 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
அதே கடாயில் காயை ஓலமாக தள்ளி வைத்துவிட்டு, நடுவில் எண்ணெய் ஊற்றி முட்டை, மஞ்சள் தூள், மிளகு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும்.
முட்டை வெந்தவுடன் பீட்ரூட் உடன் சேர்த்து கலந்து விடவேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பீட்ரூட் முட்டை பொரியல் தயார்.
இது மிகவும் எளிதாக செய்துவிடக்கூடிய சைட்டிஷ், சுவை மற்றும் ஆரோக்கியமும் நிறைந்தது. இதை சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு சைட்டிஷ் ஆகவும் சாப்பிடலாம் அல்லது சூடான சாதத்தில் நேரடியாக சேர்த்து நெய் கலந்து பிசைந்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். வெரைட்டி சாதங்களுக்கும் இது சிறந்த சைட்டிஷ்தான்.
காய்கறிகளை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதுபோல் காய்கறிகளுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும்போது அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இது ஆரோக்கியமானதுடன், சத்துக்கள் நிறைந்தது. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடல் நலனுடன் இருக்க உதவுகிறது. பீட்ரூட் விரும்பாதவர்கள் கூட இப்படி செய்யும்போது பீட்ரூட்டை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறுவதற்கு இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் லஞ்ச் பாக்ஸிலும் கட்டி கொடுக்கலாம்.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்
டாபிக்ஸ்