தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beauty Tips : பளிங்குசிலைபோன்ற தோற்றம் வேண்டுமா? கொரிய பெண்கள் கடைபிடிக்கும் ரகசியங்கள் இவைதான்!

Beauty Tips : பளிங்குசிலைபோன்ற தோற்றம் வேண்டுமா? கொரிய பெண்கள் கடைபிடிக்கும் ரகசியங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Feb 18, 2024 07:47 AM IST

Beauty Tips : பளிங்குசிலைபோன்ற தோற்றம் வேண்டுமா? கொரிய பெண்கள் கடைபிடிக்கும் ரகசியங்கள் இவைதான்!

Beauty Tips : பளிங்குசிலைபோன்ற தோற்றம் வேண்டுமா? கொரிய பெண்கள் கடைபிடிக்கும் ரகசியங்கள் இவைதான்!
Beauty Tips : பளிங்குசிலைபோன்ற தோற்றம் வேண்டுமா? கொரிய பெண்கள் கடைபிடிக்கும் ரகசியங்கள் இவைதான்!

ட்ரெண்டிங் செய்திகள்

முக பயிற்சிகள்

கன்னங்களில் இரு கைகளையும் வைத்து மேலே இழுத்துக்கொண்டு, ஆங்கில உயிரெழுத்துக்களான ஏ, இ, ஐ, ஓ, யூ என கூறினால் அது உங்களின் தொங்கிய சருமங்கள் சுருக்கமின்றி மேலே ஏற்ற உதவுகிறது. சருமத்தை இறுக்கமாக்குகிறது. எப்போதுமே முகத்தை அஷ்டகோணலாக செய்யலாம். அதுவும் முகத்துக்கு ஒரு மசாஜ்தான்.

மூலிகை தேநீர்

கொரிய பெண்கள் மூலிகை தேநீரை விரும்பி பருகுவார்கள். அது அவர்களின் சரும பொலிவுக்கு உதவும். அவர்களின் வறுத்த பார்லி டீ, ஜின்சிங் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவை, முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஈர துண்டுகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும்

எப்போது சருமத்தை துடைப்பதற்கு ஈரமான துண்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு மிருதுவான துணியை இளஞ்சூடான தண்ணீரில் நனைத்து உங்கள் முகக்தை நன்றாக துடையுங்கள். மசாஜ் போல் செய்யுங்கள். இது உங்கள் முகத்தை மிருதுவாக்கும். சுருக்கங்கள் மற்றும் கோடுகளை அகற்றும்.

கரிக்கொட்டைகளை பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்யுங்கள்

அதற்காக பிரத்யேகமாக விற்கப்படும் சார்கோல் ஃபேஸ் மாஸ்குகள் வாங்கி, பயன்படுத்துங்கள். அதை பயன்படுத்தினாலே ப்ளாக்ஹெட்ஸ்கள் மற்றும் வொயிட் ஹெட்ஸ்கள் மறையும். அவை அந்த சார்கோல் ஷீட்களிலேயே தங்கிவிடும். இவற்றை வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை பயன்படுத்துங்கள்.

இரவு முழுவதும் அணியும் மாஸ்குகளை பயன்படுத்துங்கள்

இரவில்தான் சருமம் அதனை சரிசெய்யும் வேலைகளை செய்கிறது. அது சரும செல்கள் முதல் கொலஜென் உற்பத்தி வரை, அனைத்து வேலைகளையும் சருமம் இரவில்தான் செய்கிறது. கொரிய பெண்கள் இரவு முழுவதும் ஃபேஸ் மாஸ்குகளை போட்டுக்கொண்டு சருமத்தில் ஈரப்பதத்தை பூட்டி வைக்கிறார்கள்.

சரும பாதுகாப்புக்கு இரட்டை டோஸ் கொடுக்கிறது

கொரிய பெண்கள் இரட்டை டோஸ்கள் எடுத்துக்கொள்ளும் சரும பாதுகாப்பு பொருட்களை உபயோகிக்கிறார்கள். கூடுதல் அளவிலான நீர்ச்சத்துடன், உங்கள் சருமத்தில் உள்ள கடைசி அழுக்கு வரை போக்குகிறது.

நீராவி குளியல்

உங்களுக்கு கொரிய பெண்களைப்போல், கண்ணாடி சருமம் வேண்டுமென்றால், அடிக்கடி நீராவி குளியல் எடுக்க வேண்டும். அது சருமத்தில் துவாரங்களை திறந்து அழுக்கை போக்கும். சருமத்திற்குள் சிக்கியிருக்கும் அழுக்குகளும் இதன் மூலம் வெளியேறிவிடும்.

விரல்களை வைத்து மசாஜ்

உங்கள் விரல் நுனிகளை சருமத்தில் வைத்து வட்டவடிவம் அதாவது சர்குலர் மோசன் என்று அழைக்கப்படுகிறது, அதுபோல் செய்து மசாஜ் செய்யுங்கள். மேலும் முகத்துக்கு டோனர் பயன்படுத்தும்போது, அதை கைகளால் முகத்தில் போடுங்கள், அதை பாட்டிலுடன் நேரடியாக சேர்க்காமல் கைகளால் செய்வது நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்