அழகு குறிப்புகள் : இள நரை, முது நரை இரண்டையும் போக்கும் இந்த இயற்கை ஹேர் டை! எப்படி செய்வது பாருங்கள்?
அழகு குறிப்புகள் : இள நரை, முது நரை இரண்டையும் போக்கும் இந்த இயற்கை ஹேர் டையை நீங்கள் வீட்டிலே தயாரிக்க முடியும். அதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் இள நரை மற்றும் முது நரையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கெமிக்கல் கலந்த ஹேர் டைகளை பயன்படுத்தும்போது அது பல்வேறு பக்கவிளைவுகளை சிலருக்கு ஏற்படுத்தலாம். எனவே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஹேர் டையை நாமே தயாரிக்கலாம். இதைச் செய்வதற்கு சிறிது மெனக்கெடவேண்டும். செய்துவிட்டால் உங்களுக்கு நல்லதுதான். கோமூஸ் லைஃப் ஸ்டைல் என்ற பக்கத்தில் இதை செய்வது எப்படி என் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை ஹேர் டையை தயாரிப்பது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
• கறிவேப்பிலை – 3 கொத்து
• பாதாம் – 5
• (பொடுக்குத்தொல்லை இருக்காது)
• டீத்தூள் – 2 ஸ்பூன்
செய்முறை
1. ஒரு கடாயில் கருஞ்சீரகம், கறிவேப்பிலை, பாதாம் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். சிறிது நேரம் கழித்து டீத்தூளையும் சேர்த்து நன்றாக கருகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.
2. கறுப்பு நிறத்திற்கு அனைத்தும் மாறவேண்டும். ஆனால் அடுப்பை அதிக தீயில் வைத்து கருக்கக்கூடாது. மிதமான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும்.
3. இதற்கு பயன்படுத்தாத இரும்புக்கடாயை உபயோகித்துக்கொள்ளலாம். ஏனெனில் அனைத்துப் பொருட்களையும் நல்ல கருப்பாகும் வரை வைத்திருக்கவேண்டும்.
4. நல்ல கருகிய பின்னர் அடுப்பில் இருந்து எடுத்து ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.
5. இந்தப் பொடியில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து டபுள் பாயில் செய்துகொள்ளவேண்டும்.
6. டபுள் பாயில் முறை என்பது ஒரு கடாயில் தண்ணீரை சூடாக்கி, அந்த பாத்திரத்தை அதற்குள் வைத்து கலந்துவிடவேண்டும்.
7. அந்த சூட்டில் எண்ணெயுடன் இந்தப்பொடி கலந்து வரும்போது நல்ல கிரீமியான டெக்ஸ்சர் கிடைக்கும். அந்த தருணத்தில் எடுத்து தலையில் வெள்ளை முடி உள்ள இடங்களில் தடவவேண்டும்.
8. தடவிவிட்டு 2 மணி நேரம் ஊறவிட்டு, தலையை அலசி விடவேண்டும். அலசிவிட்டுப்பார்த்தால் உங்களின் நரை முடிகள் கருப்பாகியிருக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்