அழகு குறிப்புகள் : நடிகை குஷ்பூவின் முகப்பொலிவுக்கு காரணமான எண்ணெய்; இதை தயாரிப்பது எப்படி பாருங்கள்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அழகு குறிப்புகள் : நடிகை குஷ்பூவின் முகப்பொலிவுக்கு காரணமான எண்ணெய்; இதை தயாரிப்பது எப்படி பாருங்கள்?

அழகு குறிப்புகள் : நடிகை குஷ்பூவின் முகப்பொலிவுக்கு காரணமான எண்ணெய்; இதை தயாரிப்பது எப்படி பாருங்கள்?

Priyadarshini R HT Tamil
Updated Apr 13, 2025 12:29 PM IST

அழகு குறிப்புகள் : நடிகை குஷ்பூவின் முகப்பொலிவுக்கு காரணமான எண்ணெயை தயாரிப்பது எப்படி என்று பாருங்கள்? பரபரப்பான நடிகை மற்றும் அரசியல்வாதி என அவர் தனது அன்றாட பணிகளுக்கு இடையில் அழகையும் பராமரித்துக்கொள்கிறார். தனது அழகை பராமரிக்க அவர் பின்பற்றும் வழிமுறை என்னவென்று பார்க்கலாம்.

அழகு குறிப்புகள் : நடிகை குஷ்பூவின் முகப்பொலிவுக்கு காரணமான எண்ணெய்; இதை தயாரிப்பது எப்படி பாருங்கள்?
அழகு குறிப்புகள் : நடிகை குஷ்பூவின் முகப்பொலிவுக்கு காரணமான எண்ணெய்; இதை தயாரிப்பது எப்படி பாருங்கள்?

தேவையான பொருட்கள்

• கேரட் – 1 (துருவியது)

• பீட்ரூட் – 1 (மீடியம் அளவு, துருவியது)

• தேங்காய் எண்ணெய் – அரை கப்

• பாதாம் எண்ணெய் – அரை கப்

• ஆரஞ்சு பழத்தின் தோல் – 1 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)

• வைட்டமின் இ காப்ஸ்யூல்கள் – 2

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

2. அதில் துருவிய கேரட், பீட்ரூட், பொடியாக நறுக்கிய ஆரஞ்சு பழத்தின் தோல்கள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக காய்ச்சிக்கொள்ளவேண்டும்.

3. அந்த எண்ணெயின் நிறம் ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறியிருக்கவேண்டும். அடுப்பு குறைவான தீயில் தான் இருக்கவேண்டும். அடுப்பை அதிக தீயில் வைத்தால் இந்த பொருட்கள் கருகி எண்ணெய் நாசமாகிவிடும். எனவே தீ மிதமாக மட்டும் இருக்கவேண்டும்.

4. நன்றாக அதன் சாறுகள் அனைத்தும் இறங்கியவுடன், அதை ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும். அதில் வைட்டமின் இ காப்ஸ்யூல்களின் உள்ளே உள்ள ஜெல் போன்ற திரவத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

5. இதை நன்றாக கலந்து ஒரு ஈரமில்லாத, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதை தயாரித்து டப்பாவில் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புக்கள் அனைவருக்கும் முற்றிலும் நிவாரணம் கொடுக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் அவரவர் உடல் வாகுக்கு ஏற்ற மாதிரி இவற்றை பின்பற்றி பலன்பெறலாம். மேலும் எந்த ஒரு குறிப்பையும் நீங்கள் முயற்சி செய்து பார்ப்பதற்கு முன்னர் அதை முதலில் சிறிய அளவில் பரிசோதித்துக்கொள்ளவேண்டும். அதை உங்கள் உடல் ஏற்றுக்கொண்டால், எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லையென்றால், அதை தொடர்ந்து பின்பற்றி பலன்பெறுங்கள். பரிசோதனையிலே ஒத்துவரவில்லையென்றால் விட்டுவிடுவது நல்லது. எனவே பரிசோதிக்க ஏற்றவாறு அளவாக மட்டுமே நீங்கள் எந்த ஒரு பொருளையும் தயாரித்துக்கொள்ளவேண்டும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.