அழகு குறிப்புகள்: காஸ்ட்லியான காஸ்மெடிக் வேண்டாம்.. இயற்கையான முறையில் சருமம் பளபளப்பு பெற உதவும் மாயாஜால பொருள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அழகு குறிப்புகள்: காஸ்ட்லியான காஸ்மெடிக் வேண்டாம்.. இயற்கையான முறையில் சருமம் பளபளப்பு பெற உதவும் மாயாஜால பொருள்

அழகு குறிப்புகள்: காஸ்ட்லியான காஸ்மெடிக் வேண்டாம்.. இயற்கையான முறையில் சருமம் பளபளப்பு பெற உதவும் மாயாஜால பொருள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 03, 2025 08:48 PM IST

அழகு குறிப்புகள்: இயற்கையான முறையில் சருமத்தை பளபளப்பாக வைக்கும் பொருள்களில் முக்கியமானதாக படிகார கற்கள் இருந்து வருகின்றன. சருமத்தை பளபளப்பாக வைப்பது முதல் முகப்பருக்களை நீக்குதல், பழுப்பு நிறத்தை போக்குவதை வரை படிகாரத்தின் சரும ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

அழகு குறிப்புகள்: காஸ்ட்லியான காஸ்மெடிக் வேண்டாம்.. இயற்கையான முறையில் சருமம் பளபளப்பு பெற உதவும் மாயாஜால பொருள்
அழகு குறிப்புகள்: காஸ்ட்லியான காஸ்மெடிக் வேண்டாம்.. இயற்கையான முறையில் சருமம் பளபளப்பு பெற உதவும் மாயாஜால பொருள்

அந்த வகையில் சருமத்தை மென்மையாக்குவது முதல், அவற்றை பளபளப்பாக்கும் மாயாஜால பொருளாக படிகார கற்கள் இருந்து வருகின்றன. இதனை கொண்டு உங்கள் சருமத்தை மென்மையாக்குவதோடு, படிகாரத்தில் இருக்கும் சரும ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மிக குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் பொருளாக படிகார கற்கள் இருந்து வருகின்றன. பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய படிகார கற்களை அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். சந்தைகளில் கிடைக்கும் அழகுசாதனப் பொருள்களில் பல்வேறு விதமான ரசாயனங்கள் இடம்பிடித்து இருக்கலாம். அவை சருமத்துக்கு வேறு விதமான தீங்குகளை கூட விளைவிக்கலாம். எனவே பக்க விளைவுகள், பாதிப்புகள் போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டு ரசாயனங்கள் கலவை இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் படிகார கற்கள் உதவியுடன் உங்களது சருமத்தை பிரகாசமாக்கலாம்

வெள்ளை நிறத்தில் இருக்கும் படிகாரம் தோல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது. சரும அழகை பளபளபாக்க இரவு நேரத்தில் படிகாரத்தை பயன்படுத்துவதன் மூலம் காலையில் உங்கள் சருமம் மென்மையாக மாறியிருப்பதை கண்கூடாக பார்க்கலாம்

படிகாரத்தை எப்படி பயன்படுத்துவது?

படிகாரத்தை பொடியாக அரைத்து, சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் மாற்ற வேண்டும். இந்த பேஸ்ட்டை இரவில் உங்கள் முகத்தில் ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துங்கள். சிறந்த பலனை பெற சுமார் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்ட பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். உங்கள் சருமம் பளபளப்பாகி இருப்பதை நேரடியாக பார்க்கலாம்.

படிகார கற்கள் பேஸ்டை சருமத்தில் தடவிய பின்னர் இரவில் தூங்கலாம் எனவும் அழகு கலை நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் முகத்தில் படிகாரப் பொடியைப் பூசி இரவு முழுவதும் தூங்குவது சருமத்தில் உள்ள முகப்பரு பிரச்சனையை பெருமளவில் குறைக்கும் எனவும், முகப்பருவால் ஏற்படும் தழும்புகளையும் குறைக்கும் எனவும் சொல்லப்படுகிறது

சீழ் வெளியேறும் முகப்பருக்களுக்கு தீர்வு

அனைவருக்கும் முகப்பருக்கள் சீழ் போல் வெளியேறும். இந்த பிரச்னை இருப்பவர்கள் படிகாரப் பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து முகப்பருவில் தடவுவதன் மூலம் அற்புதமான பலனைத் தரும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு படிகாரம் தெய்வீக மருந்து என்றே கூறலாம். ஏனென்றால் படிகாரம் உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்க உதவுகிறது. உங்கள் முகத்தில் படிகாரப் பொடியைப் பயன்படுத்துவதும் இயயல்பான நிறத்தை மேம்படுத்தும்.

புள்ளிகளை அகற்றுதல்

படிகார பொடி கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை அகற்றவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முகத்தில் தழும்புகள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், படிகார பொடியை முயற்சிக்கலாம். இவை சருமத்தை முழுமையாக சுத்தப்படுத்துகின்றன. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி அழுக்குகளை அகற்றுகின்றன

பழுப்பு நிறத்தை போக்குகிறது

சூரிய ஒளியின் தாக்கம் காரணமாக முகம் பழுப்பு நிறமாகிறது. இதனால் சருமத்தை மந்தமாக மாறுகிறது. சூரிய ஒளியால் ஏற்படும் பழுப்பு நிறத்தை நீக்க படிகாரத்தைப் பயன்படுத்தலாம். சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்ற வயதான தோற்ற அறிகுறிகளைக் குறைப்பதிலும் படிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

சிலருக்கு கண்களுக்குக் கீழே கரும்புள்ளிகள் ஏற்படுவதுண்டு. இவை அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கலாம். இந்த பிரச்னை இருப்பவர்கள் கண்களை சுற்றிலும் படிகாரப் பொடியைப் பயன்படுத்துவதன் மூலமும் நல்ல பலன்களைப் பெறலாம்.

ஒவ்வாமை அறிய உதவும் பேட்ச் டெஸ்ட்

படிகாரத்தை பயன்படுத்துவதற்கு முன் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா என்பதை அறிந்திருக்க வேண்டும். தோல் மருத்துவரிடம் உரிய அறிவுறுத்தல்கள் பெற்ற பின்னரே முகத்தில் படிகாரத்தைப் பயன்படுத்துவது நல்லது.

பேட்ச் டெஸ்ட் செய்வதன் மூலம் படிகாரத்தால் உங்களுக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். ஒரு சிறிய பகுதியில் படிகாரத்தைப் பூசி சிறிது நேரம் கழித்து தோல் சிவப்பு நிறமாக மாறுவது அல்லது அரிப்பு ஏற்பட்டால், உங்களுக்கு படிகாரம் ஒவ்வாமை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த பிரச்னை இருப்பவர்கள் படிகாரத்தை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு, ஆய்வுகள், சுகாதார இதழ் மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கும், ஏதேனும் உடல்நலம் தொடர்பான கவலைகள் இருந்தால், தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.