அழகு குறிப்புகள் : உருளைக்கிழங்கு சாறு ஹேர் மாஸ்க் செய்வது எப்படி? அது என்ன செய்யும் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அழகு குறிப்புகள் : உருளைக்கிழங்கு சாறு ஹேர் மாஸ்க் செய்வது எப்படி? அது என்ன செய்யும் பாருங்கள்!

அழகு குறிப்புகள் : உருளைக்கிழங்கு சாறு ஹேர் மாஸ்க் செய்வது எப்படி? அது என்ன செய்யும் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Mar 17, 2025 07:00 AM IST

அழகு குறிப்புகள் : 2 உருளைக்கிழங்கு மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தை பிழிந்து இரண்டு சாற்றையும் கலந்து தலைமுடிக்கு தடவவேண்டும். இது உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை சுத்தமாகவும், புத்துணர்வுடனும் வைக்கும்.

அழகு குறிப்புகள் : உருளைக்கிழங்கு சாறு ஹேர் மாஸ்க் செய்வது எப்படி? அது என்ன செய்யும் பாருங்கள்!
அழகு குறிப்புகள் : உருளைக்கிழங்கு சாறு ஹேர் மாஸ்க் செய்வது எப்படி? அது என்ன செய்யும் பாருங்கள்!

உருளைக்கிழங்கு சாறு உங்கள் தலைமுடியை மிருதுவாக்குமா?

ஊட்டச்சத்துக்கள் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. இது உங்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். ஊட்டமளிகுக்கும். இதனால் அது உங்கள் கூந்தலை நன்றாக கண்டிஷனிங் செய்வதாக நம்பபப்படுகிறது. வறட்சியைப் போக்குகிறது. முடி உதிர்வைக் குறைக்கிறது. உடையக்கூடிய தன்மை கொண்டது.

உருளைக்கிழங்குச் சாறு எத்தனை நாட்கள் கழித்து வேலை செய்யும்?

உருளைக்கிழங்கு சாறு தடவுவதால் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் தலைமுடியில் தெரிவதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளும். உங்கள் முடியின் வேர்க்கால்களைப் பொறுத்து அது மாறுபடும். இந்த மாற்றங்கள் தலைமுடியை வளர்க்கும். அதை மிருதுவாக்கும். தொடர்ந்து பயன்படுத்தினால், இரண்டு வாரங்களில் உங்களின் தலைமுடி அதை உறிஞ்சும். உருளைக்கிழங்கு சாற்றை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று பாருங்கள்.

உருளைக்கிழங்கு சாறு, தேன் மற்றும் முட்டை சேர்ந்த மாஸ்க்

உங்களுக்கு வறண்ட தலைமுடி இருந்தால், இரண்டு அல்லது 3 உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள். முட்டையின் வெள்ளைக்கரு 1 மற்றும் தேன் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த ஹேர் பேக் பூஞ்ஜைகளுக்கு எதிரானது, தண்ணீரில் கரையக்கூடியது மற்றும் தலையை கண்டிஷனிங் செய்யக்கூடியது. இந்த ஹேர் போக் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும். தலை முடிக்கு மிருதுவான தோற்றத்தைத் தரும்.

உருளைக்கிழங்கு, வெங்காயச்சாறு மாஸ்க்

2 உருளைக்கிழங்கு மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தை பிழிந்து இரண்டு சாற்றையும் கலந்து தலைமுடிக்கு தடவவேண்டும். இது உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை சுத்தமாகவும், புத்துணர்வுடனும் வைக்கும்.

உருளைக்கிழங்கு சாறு மற்றும் கற்றாழை மாஸ்க்

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. ஒரு சிறிய பவுலில் உருளைக்கிழங்கு சாறு, 2 ஸ்பூன் கற்றாழைச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலையில் பூசவேண்டும். இது வீக்கம் மற்றும் பொடுகைப் போக்கும். இதன் இதமளிக்கும் தன்மைகள் உங்கள தலைமுடியின் வேர்க்கால்களை ஆபத்து நிறைந்த புறஊதாக்கதிர்களிடம் இருந்து காக்கும்.

உருளைக்கிழங்கு சாறு, பாதாம், சாமந்தி பூக்கள் சாறு

தலைமுடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்யவும், வலுவான தலைமுடி வளர்ச்சிக்கும், 3 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ஒரு ஸ்பூன் சாமந்திப்பூ சாறு மற்றும் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, வாரத்தில் இருமுறை தலைக்கு பூசினால், பளபளக்கும் வலுவான கூந்தலைப் பெறலாம்.

பக்கவிளைவுகளும், முன்னெச்சரிக்கையும்

உருளைக்கிழங்கு சாற்றை நீங்கள் முதல் முறையாக தலைக்குப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் நல்ல, ஃபிரஷ்ஷான, முளைவிடாத உருளைக்கிழங்குகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். முதலில் சிறிது பயன்படுத்தி உங்களுக்கு எவ்வித தொல்லையும் கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

உருளைக்கிழங்கு சாறு தலைமுடியின் வேர்க்கால்களில் அமில அளவை முறையாகப் பராமரிக்க வைக்கிறது. தலைமுடியில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. தலைமுடியை பராமரிக்கிறது. அனைவரின் வீட்டிலும் நீக்கமற இடம்பெற்றிருக்கும் இந்த உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.