அழகு குறிப்புகள் : நெல்லிக்காய் – செம்பருத்தியைப் பயன்படுத்தி தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
அழகு குறிப்புகள் : நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தியைப் பயன்படுத்தி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுக்கூடிய எண்ணெயை நீங்கள் வீட்டிலே தயாரிக்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.

நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தியைப் பயன்படுத்தி, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் எண்ணெயை தயாரிப்பது எப்படி என்று பாருங்கள். இந்த எண்ணெயில் அதிகளவில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது தலைமுடியின் வேர்க்கால்களை தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
செம்பருத்தி இலைகள்
நிழலில் உலர்த்திய செம்பருத்தி இலைகளை 2 முதல் 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து 2 ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
எண்ணெயை காய்ச்ச வேண்டும்
ஒரு கப் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கப் நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து குறைவாக தீயில் சூடடேற்ற வேண்டும். அதில் இந்த செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் நெல்லிக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும். மிதமான சூட்டில் அது சில நிமிடங்கள் கொதிக்க வேண்டும். ஒரு 20 நிமிடம் அதை கொதிக்க விடவேண்டும். அவ்வப்போது இடையில் கரண்டி வைத்து கிண்டிவிடுங்கள்.
எண்ணெயை எப்படி பதப்படுத்தவேண்டும்?
பின்னர் அடுப்பில் இருந்து இறக்கவேண்டும். அது குளிரட்டும். அறையின் வெப்பப்பதம் வந்தவுடன், அதை வடிகட்டவேண்டும். வெறும் எண்ணெயை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். நன்றாக வடிந்து வர துணியை பயன்படுத்தி வடிகட்டிக்கொள்வது நல்லது. இதை சுத்தமான பாட்டிலுக்கு மாற்ற வேண்டும்.
எண்ணெயை எப்படி பயன்படுத்தவேண்டும்?
நீங்கள் இந்த எண்ணெயை தலையில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவேண்டும். அதை சில மணி நேரங்கள் அல்லது ஓரிரவு தலையில் ஊறவிடவேண்டும். பின்னர் நல்ல ஷாம்பூ தேய்த்து தலையை அலசவேண்டும். இதைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் தலைமுடி கருகருவென அடர்ந்து வளரும். உங்களுக்கு தேவையான அளவு செய்து வைத்துக்கொண்டு பலன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்