அழகு குறிப்புகள் : கோடையில் வியர்வையால் உதிரும் தலைமுடி! புதிய முடி வளர உதவும் எண்ணெய்கள் எவை?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அழகு குறிப்புகள் : கோடையில் வியர்வையால் உதிரும் தலைமுடி! புதிய முடி வளர உதவும் எண்ணெய்கள் எவை?

அழகு குறிப்புகள் : கோடையில் வியர்வையால் உதிரும் தலைமுடி! புதிய முடி வளர உதவும் எண்ணெய்கள் எவை?

Priyadarshini R HT Tamil
Published May 18, 2025 11:44 AM IST

கோடையில் உங்கள் தலையில் வியர்வையால் முடிகள் உதிரும் வாய்ப்பு உள்ளது. புதிய முடியை வளரச் செய்வதற்கு நீங்கள் எந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம் என்று பாருங்கள்.

அழகு குறிப்புகள் : கோடையில் வியர்வையால் உதிரும் தலைமுடி! புதிய முடி வளர உதவும் எண்ணெய்கள் எவை?
அழகு குறிப்புகள் : கோடையில் வியர்வையால் உதிரும் தலைமுடி! புதிய முடி வளர உதவும் எண்ணெய்கள் எவை?

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் லேசானது மற்றும் உங்கள் தலைமுடிக்கு ஆழ்ந்த ஊட்டமளிப்பதும் ஆகும். இது உங்கள் முடியின் வேர்க்கால்களுக்குள் ஊடுருசி, உங்கள் தலைமுடியை வேரில் இருந்து வலுப்படுத்துகிறது.

கரிசலாங்கண்ணி எண்ணெய்

இது மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. தலைமுடிக்கு இது மிகவும் நல்லது. இது ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. தலைமுடி புதிதாக வளர உதவுகிறது.

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெயில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. தலைமுடி மற்றும் வேர்க்கால்களுக்கு வலு கொடுக்கிறது.

ஆர்கன் எண்ணெய்

இதில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிக்குகளை நீக்குகிறது. சூரியனால் தலைமுடிக்கு ஏற்படும் சேதத்தைப் போக்குகிறது. இது தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மல்லிகை எண்ணெய்

மல்லிகை எண்ணெய், தலைமுடியின் வேர்க்கால்களுக்கு இதமளிக்கிறது. இது தலைமுடியின் பளபளப்பைக் கூட்டுகிறது. இது தலைமுடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது. இது புத்துணர்வு தரும் கோடைக்கால மணம் வீசும் ஒன்றாகும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது உங்கள் தலைமுடி அடர்த்திக்கு உதவுகிறது. தலைமுடி உடைவதையும் குறைக்கிறது.

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய் தலைமுடியின் வேர்க்கால்களை தூண்டுகிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கிறது.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலையில் உள்ள பொடுகைப் போக்கும். இது உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

நல்லெண்ணெய்

இது உங்கள் தலைமுடிக்கு குளுமை தரும். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது கோடை காலத்துக்கு உங்கள் தலைமுடி ஈரப்பதத்தைக் தக்க வைக்க உதவுகிறது.