அழகு குறிப்புகள் : வேண்டாம்! இந்தப் பொருட்களை மட்டும் முகத்தில் பூசிவிடவேக் கூடாது! அவை என்னவென்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அழகு குறிப்புகள் : வேண்டாம்! இந்தப் பொருட்களை மட்டும் முகத்தில் பூசிவிடவேக் கூடாது! அவை என்னவென்று பாருங்கள்!

அழகு குறிப்புகள் : வேண்டாம்! இந்தப் பொருட்களை மட்டும் முகத்தில் பூசிவிடவேக் கூடாது! அவை என்னவென்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 13, 2025 10:52 AM IST

உங்கள் முகத்தின் அழகை பாதிக்கும் இந்தப் பொருட்களை மட்டும் உங்கள் முகத்தில் பூசிவிடவேக் கூடாது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அழகு குறிப்புகள் : வேண்டாம்! இந்தப் பொருட்களை மட்டும் முகத்தில் பூசிவிடவேக் கூடாது! அவை என்னவென்று பாருங்கள்!
அழகு குறிப்புகள் : வேண்டாம்! இந்தப் பொருட்களை மட்டும் முகத்தில் பூசிவிடவேக் கூடாது! அவை என்னவென்று பாருங்கள்!

பாடி லோசன்

பாடி லோசனை நீங்கள் முகத்தில் பூசக்கூடாது. இவற்றை ஏன் நாம் பாடி அதாவது உடலில் மட்டுமே பூச வேண்டிய லோசன்கள் எனக் குறிப்பிடுகிறோம் என்றால், அதற்கு காரணம் அவை முகத்தில் உள்ள சருமத்துக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருக்காது. உடலில் உள்ள சருமத்துக்கு உகந்தவையாக இருக்கும். இவை கொஞ்சம் திக்கானதாகவும், அடர்த்தியானதாகவும், எண்ணெய் கொண்டதாகவும், முகத்தில் உள்ள துவாரங்களை அடைத்துவிடுவதாகவும் இருக்கும். இதனால் உங்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும் அல்லது அலர்ஜி உண்டாகும். ஏனெனில் இதில் செயற்கை மணமூட்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

சர்க்கரை

சர்க்கரையை நீங்கள் முகத்திற்கு ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம் என எண்ணற்ற வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. தக்காளியில் சர்க்கரையை வைத்து முகத்திற்கு ஸ்கிரப் செய்தால் உடனடி முகப்பொலிவு கிடைக்கும் என்று கூறப்படும். ஆனால் அது உண்மை கிடையாது. சர்க்கரை உங்கள் முகத்தில் உள்ள சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எரிச்சல், சிவத்தல், வறட்சி மற்றும் எண்ணற்ற உபாதைகளை ஏற்படுத்தும்.

கொதிக்கும் தண்ணீர்

உங்கள் முகத்தை கொதிக்கும் தண்ணீரை வைத்து கழுவாதீர்கள். இது உங்கள் முகத்தை சோர்வானதாகவும், வறட்சியானதானவும் காட்டும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவைக் குறைக்கும். இது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். முகக்தை நீங்கள் கழுவ இளஞ்சூடான தண்ணீரை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும். இது உங்கள் முகத்தில் உள்ள சருமத்தின் தூவரங்களை திறக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. இது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கும் ஒரு சிறந்த கிளன்சர் ஆகும்.

எலுமிச்சை

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. இதை அப்படியே உங்கள் முகத்தில் பூசினால், அது உங்களுக்கு முகத்தின் சருமத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும். எலுமிச்சையில் உள்ள வேதிப்பொருட்கள் உங்கள் சருமத்தை வெளிச்சத்துக்கு சென்சிட்டிவாக மாற்றிவிடும். இதனால் முகத்தில் எரிச்சல் மற்றும் வேதிப்பொருட்களால் ஏற்படும் காயங்கள் உண்டாகும்.

பற்பசை (டூத்பேஸ்ட்)

பற்பசையை உங்கள் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை மறைக்க பயன்படுத்தலாம் என்ற கட்டுக்கதை உள்ளது. ஆனுல் இது உங்கள் சருமத்தில் எரிச்சல் மற்றும் காயங்களை ஏற்படுத்தும். நீங்கள் முகப்பருக்களின் மீது தடவினால் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் உள்ள கடுமையான உட்பொருட்கள் உங்கள் சருமத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தும். உங்கள் சருமத்தை கடுமையாக பாதிக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை சிலர் முகப்பருக்களை நீக்க பயன்படுத்துவார்கள். இதில் உள்ள ஆல்கலைன் உட்பொருட்கள், உங்கள் சருமத்தில் உள்ள அமில அளவுகளை கடுமையாக பாதிக்கும். இதனால் சருமத்தில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தேங்காய் எண்ணெய்

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெயை முகத்தில் பூசக்கூடாது. தேங்காய் எண்ணெய் உங்கள் உடலில் உள்ள சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு இயற்கை கொடுத்த வரம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் நிறைந்தது. இதன் கடுமையான அடர்த்தியால் நீங்கள் இதை முகத்தில் உள்ள சருமத்தில் தடவும்போது, அது முகப்பருக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மயோனைஸ்

மயோனைஸை சாப்பிடுவதைத் தவிர, சிலர் தலைமுடி பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்புக்கும் பயன்படுத்துகிறார்கள். இதை சிலர் பேஸ் பேக்கில் கலந்து தடவுகிறார்கள். ஆனால் அது நல்லதல்ல. இதில் உள்ள அமில குணம், உங்கள் சருமத்தில் உள்ள துவாரங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

எனவே உங்கள் சருமத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள். உங்கள் சருமத்துக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொருட்களை மட்டும் உபயோகித்து சரும ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.